Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொளுத்தும் கோடையிலும் மின்வெட்டு இல்லை” - மகிழ்ச்சி மழையில் வில்லிவாக்கம் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனக் கலவையான மக்கள் வசிக்கும் தொகுதி வில்லிவாக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரு நாள் இரவு திடீரென்று வெளியேறிய வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியும் கூட. அப்போது இந்தத் தொகுதி மக்கள் பல நாள்கள் மின் இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

அதை மனதில் வைத்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் இந்தத் தொகுதியில் மின்துறை சார்ந்த பிரச்சினைகளைக் களையப் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

அதன் பலனாக, கடந்த ஆண்டு மழைக் காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லாத நகரமாக இந்த வில்லிவாக்கம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்துப் பேச மின் ஊழியர், உயர் அதிகாரிகள் தொடங்கி பொதுமக்கள் வரைப் பலரிடம் பேசினோம். அத்தனை பேர் பேச்சிலும் அவ்வளவு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுவதை நம்மால் உணர முடிந்தது.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அயனாவரம் உதவிப் பொறியாளராக பணியாற்றிவருபவர் எஸ்.பாபு. கடந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில், மின்துறைசார்ந்து என்னென்ன மாற்றங்கள் இந்தத் தொகுதியில் நடைபெற்றுள்ளன என்பது குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

அவர், "எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து இணைப்புகளும் வீட்டு உபயோகம் சார்ந்தவைதான். அதைவிட்டால், இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி இந்தப் பகுதிக்குள்தான் வருகிறது. வாடிக்கையாளர்கள் எனப் பார்த்தால், சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். வாடிக்கையாளர்களின் புகார்களை உடனடியாக சரிசெய்ய இந்த ஆட்சியில் மின்னகம் என்ற சேவை தொடங்கப்பட்டது. அந்த மின்னகத்துக்கு அதிகமான புகார்கள் அயனாவரத்திலிருந்து வந்தன.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

அதில் குறைந்த மின் பளு சார்ந்த புகார்கள் அதிகம் இருந்தன. அதைக் கொண்டு, அயனாவரம் முனுசாமி தெருவில் புதியதாக முதன்முறையாக ஒரு ஒற்றை கம்பம் மின்மாற்றி (சிங்கிள் போல் டிரான்ஸ்ஃபார்மர்) அமைத்தோம்.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

இந்தப் பகுதிக்கு புதியதாக Low Tension Line அமைத்துக் கொண்டு கொடுத்தோம். அதன் பின்னர் மின்னகத்துக்கு வரும் புகார்கள் அதிகம் குறைந்துள்ளன. தினம் அயனாவரம் அலுவலகத்திற்கு வரும் புகார்களும் குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்குத் துரிதமாக நடவடிக்கை எடுத்து குறைகளைச் சீர்செய்துள்ளோம்.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

இந்த மழைக்காலத்தில்கூட ஒரு நிமிடம் கூட மின் இணைப்பைத் துண்டிக்கவே இல்லை. முன்கூட்டியே மழை வெள்ளம் தேங்கும் பகுதிகளைக் கள ஆய்வு செய்து, காமராஜர் தெரு, ரெட்டி காலனி, திருவள்ளுவர் நகர் என 22 மின் விநியோக பெட்டிகளை உயரப்படுத்தி நட்டுள்ளோம். அதனால், எங்கும் வெள்ளம் தேங்கும் பிரச்சினை வரவே இல்லை.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

குறிப்பாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில்தான் இந்தக் கொரோனா காலகட்டத்தில் அதிக நோயாளிகள் சிகிச்சை எடுத்து வந்தனர். நாங்கள் முன்கூட்டியே எடுத்த பல நடவடிக்கைகள் கொரோனாவின் போது உதவியாக இருந்தன. இந்த மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் மின் சேவை சார்ந்த பிரச்சினைகளே எழவில்லை. அதற்கு அரசின் அதிரடி நடவடிக்கைகளே முக்கிய காரணம்" என்கிறார்

தாகூர் நகர் லைன் இன்ஸ்பெக்டர், "பழைய முறை டிரான்ஸ்ஃபார்மர்களை பராமரிப்பது மிகக் கடினம் சார். ஆனால், இப்போது ஆர்.எம்.யு என்று ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. அதைக் கொண்டு வேலை செய்வதும், பராமரிப்பதும் மிக எளிதாக உள்ளது.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

முன்பு ஏதேனும் மின் பிரச்சினை வந்தால், டிரான்ஸ்ஃபார்மரின் மின் இணைப்பை மொத்தமாகத் துண்டித்துவிட்டு, பழுதை சரி செய்ய வேண்டும். இந்த ஆர்.எம்.யு முறையில் அந்தச் சிக்கல் இல்லை. மின் இணைப்பைத் துண்டிக்காமல், லைனை மாற்றி விட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணி செய்யலாம்.

ஆகவே இந்த நவீன முறையை அறிமுகப்படுத்திய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி" என்கிறார்

வில்லிவாக்கம் உபகோட்டம் இளநிலை பொறியாளராகப் பணி செய்யும் ஊழியர், "எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் 33 கேவி ஐசிஎஃப் துணைமின் நிலையம் உள்ளது. 50 வருடங்கள் முன்னால் இந்த மின்நிலையம் அவுட் டோர் மாடலில் இருந்தது. ஆனால் இப்போது அதை இன் டோர் மாடலுக்கு மாற்றி இருக்கிறோம்.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

இப்படி இன் டோராக மாற்றுவதற்கு முன்னால், மழையாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் வெளியில் நின்றுகொண்டுதான் பழுதுகளைச் சரி செய்தாக வேண்டும். இப்போது இன் டோர் மாற்றியதால் உபகரணங்கள் அதிகம் சேதம் ஆவதில்லை. அதன் ஆயுள் அளவும் அதிகரித்துள்ளது.

அதேபோல் அடிக்கடி பறவைகள் உட்கார்ந்து அடிப்படுவது, மரங்கள் முறிந்து விழுந்து பழுதாவது போன்ற எந்தவித மின் இணைப்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்படும் போது அறையின் உள்ளாக மிகத் தெளிவாகப் பிரச்சினைகளைக் கண்டறிந்து சரி செய்வது எளிதாகவும் இருக்கிறது.

 CM Stalin has transformed the Villivakkam assembly constituency into a power cut-free area

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால், மூர்த்தி நகர், சவுத் திருமலை நகர், நார்த் திருமலை நகர் போன்ற பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. ஏற்கெனவே இவை தாழ்வான பகுதிகள் என்பதால் மழைக்காலங்களில் வெள்ளநீர் 3 அல்லது 4 நாள்கள் வரை தேங்கும். அப்படித் தேங்கும் போது 4 நாள்கள் வரை கூட மின் இணைப்பைத் துண்டித்து வைத்திருப்போம்.

ஆனால், இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த மூன்று பகுதிகளிலும் உள்ள அனைத்து மின் விநியோகப் பெட்டிகள் அனைத்தையும் உயரப்படுத்தி நட்டுள்ளோம். சுமார் 16 பெட்டிகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த மழைக்கு ஒரு நிமிடம் கூட மின் இணைப்பை இந்தப் பகுதிகளில் நாங்கள் துண்டிக்கவே இல்லை. இது பெரிய மாற்றமாக மக்கள் உணர்ந்து சொல்கிறார்கள்" என்கிறார்

இதே போல எங்கள் பகுதியில் மட்டும், வெட்டவெளியிலிருந்த சுமார் 12 மின்மாற்றி முறையை மாற்றி, அவைகளை ஆர்.எம்.யுக்களாக மாற்றி இருக்கிறோம்.

இதனால் என்ன இலாபம் என்றால், முன்பு பழைய டிரான்ஸ்ஃபார்மர் முறையில் மேலே ஏறி, மின் பழுதுகளைச் சரி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது ஏதேனும் கவனக்குறைவு ஏற்பட்டால், மனித உயிரே பறிபோய்விடும். அப்படிப் பல சம்பவங்கள் முன்பு நடந்துள்ளன. இதைப் போன்ற விபத்துகளை முற்றிலுமாக ஒழித்துள்ளது இந்த ஆர்.எம்.யு முறை. அதைத் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எங்கள் மின் ஊழியர்கள் சார்பாக நன்றி" என்கிறார்

இதே பகுதியில் வசிப்பவர் அப்துல்காதர், அவர் மின் துறை சார்ந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். இவரது தெருவில் முன்பு 100 குடும்பங்கள் இருந்ததாகக் கூறும் இவர், இப்போது 200 குடும்பங்களுக்கு மேல் உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்.

இந்த வளர்ச்சிக்குத் தக்க, மின்மாற்றியின் தரம் உயர்த்தப்படவில்லை. இருப்பதைக் கொண்டே மின் சேவை வழங்கப்பட்டு வந்தது. அதனால், அடிக்கடி மின் பளு தாங்காமல் பழுது நேர்ந்துள்ளது. இத்தனை ஆண்டுக்கால பிரச்சினையை இந்த ஒன்றரை ஆண்டுகளில் சரிசெய்துள்ளனர் என்கிறார் இவர்.

உதவி செயற்பொறியாளர் ராஜ கோபால் ஸ்ரீதர், "எங்கள் வட்டத்திற்கான எல்லையில் மூன்று துணை மின் நிலையங்கள் உள்ளன. ஒன்று, 110 கிலோ ஓல்ட் துணை மின் நிலையமும் இரண்டு, 33 கிலோ ஓல்ட் மின் நிலையம் உள்ளன. 110 கேவியில் 11 கேவி மின்மாற்றிகள் உள்ளன. 33கேவியில் 6 மின்மாற்றிகளும் உள்ளன. இங்கிருந்துதான் சுற்றுவட்டாரத்திற்கு மின் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை எங்கள் பகுதியில் 48 ஆர்.எம்.யுக்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் பகுதியில் மட்டும் தாழ்வாக இருந்துவந்த 77 மின் விநியோக பெட்டிகளை உயரப்படுத்தியுள்ளோம்" என்கிறார்

செயற்பொறியாளர் மாதேசன், "ஐசிஎஃப் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை, சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமையகம் எனப் பல இந்தத் தொகுதிக்குள்தான் வருகின்றன.

ஆகவே மின் சேவையைத் தடை இல்லாமல் வழங்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தின் பல மின் சாதனங்களை நவீனமயமாக்கி உள்ளோம். அதனால் நெடுங்கால மின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும் எதிர்கால தேவையைக் கவனத்தில் கொண்டு, ஐசிஎஃப் பகுதியில் புதியதாக ஒரு துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அயனாவரம் ஆவின் பகுதியிலும் புதியதாக ஒரு துணைமின் நிலையத்தை அமைக்க உள்ளோம்.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதால் அதற்கான மின் தேவையை ஏற்படுத்தித் தரும் பொருட்டும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+