இரவோடு இரவாக.. ஸ்டாலின் நடத்திய அவசர மீட்டிங்.. சீனியர் லாயர்களுடன் பேச்சு.. தாக்கலாகும் மசோதா!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வைக்கும் மசோதா தாக்கலாக வாய்ப்பு உள்ளது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் அவசரமாக இது தொடர்பாக ஆலோசனைகளை, சந்திப்புகளை நடத்தினார். ஸ்டாலின் சார்பாக மூத்த வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ உள்ளிட்டோரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக எம்.பி., என்.ஆர். இளங்கோ, அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்துள்ளதால் அந்த மசோதா அதிக கவனம் பெற்றுள்ளது.
கரூர் வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் விசாரித்து வருகிறது.
இதில் தமிழக அரசு வைத்த வாதத்தில், இது போன்ற கூட்டங்களை நடத்துவதற்கான SOP விரைவில் உருவாக்கப்படும். அதுவரை அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.
பொது இடங்களில் நடத்தப்படும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. SOP உருவாக்கப்பட்டு சட்டம் கொண்டு வரும் வரை அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி தரமாட்டோம் என்று தமிழக அரசு வாதம் வைத்தது. மேலும் தமிழக அரசு வாதத்தில், போதிய ஏற்பாடுகளை செய்யாமல் மக்களை அழைத்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் தலைமறிவாகிவிட்டனர். அவர்கள் வந்தார்கள். பிரச்சனை என்றதும் அப்படியே தலைமறைவாகி மறந்துவிட்டனர். நாங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. முழு விஷயங்களும் இந்த இரண்டு மனுதாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை. புஸ்ஸி, நிர்மல் குமார்தான் இதை ஏற்பாடு செய்தனர். நாங்கள் பொருட்களைச் சேகரித்து வருகிறோம். மரணத்திற்கு அவர்கள் என்ன பங்கு வகித்தனர் என்பது கேள்வி.
விஜய் இதில் விதிமீறல்
விஜய் நிறைய முறை விதிமீறல்களை செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி இந்தி ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏற்பாட்டாளர்களால் கும்பல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.
மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக கூடாது என்பதால் விஜயின் ரோடு ஷோவை நாங்கள் தடுக்கவில்லை. கூட்ட நெரிசல் ஏற்படும் என்று நாங்கள் திட்டமிட முடியாது. கூட்டத்தை அமைதிப்படுத்த மனுதாரரிடமிருந்து ஒரு அறிவிப்பு கூட இல்லை. கூட்ட நெரிசலின் போது அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்? அவர்கள் முறையாக நடந்து கொள்ள ஏதாவது பொது அறிவிப்பு வெளியிட்டார்களா? இல்லை.
பிரச்சனை என்றதும் ஓடிய தவெகவினர்தான் முக்கிய காரணம். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற கூட நினைக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அவர்கள் அடிப்படை வசதிகளைக் கூட வழங்கவில்லை. 5-7 மணி நேரம் அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். இந்த அலுவலகப் பொறுப்பாளர்கள் யாராவது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒழுங்காக நடந்து கொள்ள ஒரு அறிவிப்பு கூட இல்லை. இது போன்ற நிலவரங்களை தடுக்க விரைவில் அரசியல் கூட்டங்களுக்கு SOP கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications