சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதுகுவலி.. முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு மருத்துவமனையில் பரிசோதனை.. இன்றே வீடு திரும்புவார்

Google Oneindia Tamil News

சென்னை: முதுகு வலி காரணமாக தமிழ்நாட்டு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை இன்று செய்து கொண்டார். இதையடுத்து அவர் இன்றே வீடு திரும்புகிறார்.

தமிழ்நாட்டு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை 7.10 மணிக்கு சென்னை போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு ஏன் வந்தார்? என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.

”மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை” வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!”மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை” வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

அதில் முதுகு வலி தொடர்பான வழக்கமான மருத்துவ பரிசோதனை முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்ப உள்ளார்.

CM Stalin hospitalized due to mild fever

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

English summary
Tamil Nadu Chief Minister Mukherjee Stalin underwent a medical examination at a private hospital in Chennai today due to back pain. He is returning home today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X