ஆஹா அற்புதம்.. கிளாம்பாக்கத்தை விடுங்க! ஈசிஆர் பக்கம் வாங்க! ஷாப்பிங் மால் கணக்கா ஒரு பஸ் ஸ்டாண்ட்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ 90 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
சென்னை ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற மாமல்லபுரம். சுற்றுலா தலமான இங்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பணிகள் வருகை தருகிறார்கள்.

பல்லவ மன்னர்கள் காலத்து சிற்ப கலைகளுக்கு இந்த மாமல்லபுரம் பிரபலமாகும். இங்கு ஒரே கல்லினால் ஆன வெண்ணெய் உருண்டை கல் மிகவும் பிரசிச்தி. அத்துடன் கடற்கரையில் கோயிலும் உள்ளது. இங்கு பெரும்பாலான சிற்பங்கள் ஒற்றைக் கல்லினால் செதுக்கப்பட்டவையாகும்.
தர்மராஜ ரதம், பீம ரதம், அர்ச்சுன ரதம், திரௌபதி ரதம், நகுல சகாதேவ ரதம் ஆகிய பஞ்சபாண்டவ ரதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இப்படிப்பட்ட சுற்றுலா தலதத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பெற்றுள்ளது.
பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்தாலும் மாமல்லபுரத்திற்கென தனியாக பேருந்து நிலையம் ஏதும் அமைக்கப்பட்டவில்லை. தற்போது தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரே ஒரு குறுகிய இடத்தில் திறந்த வெளி பகுதி பேருந்து நிலையமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு வரும் பேருந்துகளை நிறுத்த போதிய இடம் இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. 1992ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போன்று நவீன பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி வருவாய்த் துறை மூலம் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் நவீன பேருந்து நிலைய பணிகளை மேற்கொள்ள ரூ 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். பிறகு அந்த பணியானது பொதுப் பணித் துறையிடம் இருந்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணிகள் தொடங்காமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அந்த பகுதியில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு, அந்த இடம் பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஏற்ற இடம் என சான்றிதழும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சட்டசபை மானிய கோரிக்கையின் போது மாமல்லபுரத்தில் ரூ 90.5 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் கட்டுமான பணிகள் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கும் என்றும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த வேலிகாத்தான் மரங்கள் அகற்றப்பட்டு பேருந்து நிலையம் கட்டுவதற்கு இடம் தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்காக நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் மாதிரி புகைப்படங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஆர்ச் உள்ளது. அதன் உள்ளே மாமல்லபுரத்தை போற்றும் வகையில் கோயில் கோபுரங்கள் உள்ளன.
அந்த பேருந்து நிலையத்தின் நுழைவுவாயிலில் தமிழ் வாழ்க என எழுதப்பட்டிருக்கிறது. எல் வடிவத்தில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மட்டும் இல்லாமல் நிறைய அடுக்குமாடிகளுடன் கூடிய கடைகளும் அமைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஷாப்பிங் மால் போன்று காட்சியளிக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications