வடசென்னையே அடியோடு மாறப்போகுது.. ரூ.4,181 மதிப்பீட்டில் விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!
சென்னை: ரூ.4,181 மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்க பணிகளை இன்று தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதன் மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும். மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சென்னை, தங்கச் சாலை (Mint Street) அரசு அச்சகம் அருகில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.4,181 கோடி மிதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ, பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
வடசென்னை வளர்ச்சி விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளர்ச்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு இந்த பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரே போதுமானது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications