அன்பில் மகேஷ் செய்த சம்பவம்.. “இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்”! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: பட்டியலின மக்களின் சாதியை குறிப்பிடும் வகையில் அரசு பள்ளிக்கு முகவரி இருந்தது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் கறுப்பு மை கொண்டு அழித்து மாற்றினார். இந்த செயலுக்கு காரணமாக இருந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் இன்னமும் சில மாநிலங்களில் பெயர்களுக்கு பின்னால் சாதியை சேர்த்துக்கொள்வது பெறுமையாக கருதப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் பெயருக்கு பின்னால் படிப்பை சேர்துக்கொள்வது கவுரவமாக பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கும், புரிதலுக்கும் கல்வி இன்றியமையாததாகும். இக்கல்வியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமை திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது. இப்படி இருக்கையில் பள்ளியின் முகவரியில் சாதிய அடையாளம் இருந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் கிராம மக்களிடையே நெருடலை ஏற்படுத்தி வந்தது.

இப்பள்ளியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதன் முகவரியாக 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று ஊர் மக்கள் நீண்ட காலமாக முயன்று வந்திருக்கின்றனர். ஆட்சியாளர்களுக்கும் வலியுறுத்தியுள்ளனர். இப்படி இருக்கும் நிலையில், இன்று அதிரடியாக அப்பளிக்கு விசிட் செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கறுப்பு மை கொண்டு முகவரியை அழித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் கூறுகையில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம். தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம்.
இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம். ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் G.அன்பழகனிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். 'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' - மு.க" என்று அமைச்சர் பதிவிட்டிருந்தார்.
இதனை பாராட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், "சமத்துவச் சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவர் கணேசன் - வழக்கறிஞர் அன்பழகன் போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்" என்று வாழ்த்தியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications