“தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே எங்கள் உறுதியான கொள்கை”.. அடித்துச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது இருமொழிக் கொள்கையே எங்கள் உறுதியான கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார். இந்தக் கொள்கை உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கை கொள்கை இன்று வெளியிடப்பட்டது.

மாநில கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில், 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழை முதல் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை உருவாக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022இல் அமைக்கப்பட்டு, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2024 ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும். மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கிறேன். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது" என்றார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 75 சதவிகிதத்தினர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது அடுத்தாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 901 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை தனித்துவமானது; முற்போக்குச் சிந்தனை கொண்டது. எதிர்காலத் தேவைக்கான ஆற்றலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கையில் தாய்மொழியான தமிழ், பிரதானமான அடையாளமாக இருக்கும்.
படித்து மனப்பாடம் செய்வது போன்று அல்லாமல், சிந்தித்து கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. படித்த மாணவர்களாக மட்டுமல்லாமல், படைப்பாளர்களாகவும் அவர்களை உருவாக்கும். அறிவியலுக்கு புறம்பான சிந்தனைகள் இதில் இல்லை. இந்தக் கல்விக் கொள்கை மூலம் கல்வியில் உலகளாவிய போட்டிகளை நமது மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications