வாஷிங் மெஷின்! மோடியின் குடும்பம் என்பது ED, வருமான வரி துறை, சிபிஐதான்- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவில் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களில் 25 பேரில் 20 பேர் மீதான ஊழல் வழக்குகள் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 3 பேரின் வழக்குகள் மொத்தமாகவே முடித்து வைக்கப்பட்டன. இதைத்தான் மோடியின் கட்சி வாஷிங் மெஷின் கட்சி என்கிறார்கள்.

CM Stalin says that ED CBI IT are Modi s family

ஊழல்வாதியாக உள்ளவர்கள் கூட பாஜகவில் சேர்ந்தால் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள் என காங்கிரஸ் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் 'வாஷிங் மெஷின்' பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

"பேச நா இரண்டுடையாய் போற்றி" எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

மோடியின் குடும்பம் என்பது 'E.D - I.T. - C.B.I.'தான்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த புலனாய்வு அறிக்கையை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஊழல் வழக்குகளுக்க ஆளான எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 6 அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும் திரிணமூல் காங்கிரஸில் இருந்து 3 பேரும் கட்சி தாவியுள்ளனர்.தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2 பேரும், சமாஜ்வாதி, ஜெகன்மோகன் கட்சியில் இருந்து தலா ஒருவரும் விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜகவுடன் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 12 பேர் மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்.

இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது: விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தவர்கள் பாஜகவில் இணைந்ததால் மோடி வாஷிங் மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. நரேந்திர மோடி- அமித்ஷா கூட்டணியின் செயல் ஜனநாயகத்திற்கு சாபக்கேடாகியுள்ளது என விமர்சித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+