"சார்.. திருவிக நகரில் வெள்ளம்.." சட்டென சொன்ன நிருபர்.. "எங்கே காட்டுங்க.." பட்டென கேட்ட முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் ஸ்டாலினிடம் வடசென்னை பகுதியான திருவிக நகரில் வெள்ள நீர் இருக்கிறதே என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எங்கே காட்டுங்க என கேட்டார்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளையும் மீட்பு பணிகளையும் பார்வையிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தில் எத்தனை பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்.

மழை வெள்ள மீட்பு பணிகள துரிதமாக மேற்கொண்டு வருவதற்காக போகும் இடமெல்லாம் பொதுமக்களே தமிழக அரசை பாராட்டுகிறார்கள். பொதுப் பணித் துறையும் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தமானது தீவிரமடைந்ததால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

 சென்னையின் மழைக்காலம்

சென்னையின் மழைக்காலம்

சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும் 80 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்ததாக தமிழக அரசு சொல்கிறது. இந்தப் பணிகள் 100 சதவீதம் நடந்து முடிந்தால் மழை நீர் தேங்கவே செய்யாது என்பது சென்னை மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தண்ணீர் தேங்கல்

தண்ணீர் தேங்கல்

இந்த மழைக்கு சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. எனினும் பல இடங்கள் மழை நீரில் மிதக்கின்றன. முகலிவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகள் மிதக்கின்றன. இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேட்டி அளிக்கையில் தமிழகத்தில் எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம் என்றார்.

வடசென்னை

வடசென்னை

மேலும் வட சென்னை தொகுதியில் தண்ணீர் அதிகமாக தேங்கி கொண்டிருக்கின்றன கேட்ட கேள்விக்கு என்னுடன் வாருங்கள் காண்பியுங்கள். மழை பெய்யும் போது இருக்கும். மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்திருக்கும். இனி வரும் மழையை எதிர்பார்த்துதான் நாங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்தும் வர வாய்ப்பே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கொளத்தூர், பெரம்பூர், திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கொசுவலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். மேலும் இன்று சீர்காழிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+