சட்டசபையில்.. ஆளுநர் உரைக்கு இன்று ஸ்டாலின் "பதிலடி".. ஜோடி போட்ட ஓபிஎஸ் - எடப்பாடி.. ஒரே முடிவு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆளுநர் உரை மீதான விவாத கேள்விகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்துகிறார்.
ஜனவரி 9ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிறைவு பெறுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன.
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

என்ன செய்தார்?
ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.

தவிர்த்த பகுதிகள்
அதோடு தமிழ்நாடு அரசின் கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்கமாக இருக்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் ஆர். என் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்தார். இதெல்லாம் போக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகிறது. தமிழ்நாடு முதலீடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று முதலீடுகள் தொடர்பான வார்த்தைகளையும் ஏனோ ஆளுநர் ஆர். என் ரவி அப்படியே தவிர்த்து இருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

ஆளுநர் உரை நீக்கம்
ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மறுநாள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திலும் திமுக ஆளுநர் உரை மீதான வருத்தத்தை பதிவு செய்தது. திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் ஆளுநர் உரைக்கு வருத்தமும் நன்றியும் தெரிவித்து தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுநர் சுயமான பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக தீர்மானத்தில் கூறப்பட்டது.

என்ன முடிவு
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆளுநர் உரை மீதான விவாத கேள்விகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்துகிறார். ஆளுநர் உரை மீதான விவாத கேள்விகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்துகிறார். அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர், அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அணியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருமே ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று பங்கேற்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒன்றாக முடிவு எடுத்துள்ளனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை












Click it and Unblock the Notifications