பொய் பொய்யா சொல்றாரு மோடி.. எல்லா தேர்தலிலும் திமுக வெற்றி வெறும்.. கோவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: பல்வேறு நலத்திட்டங்களை இன்று கோவையில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. பொள்ளாச்சி அரசு விழாவில், ஒரே நேரத்தில், 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் இன்று நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில், முதல்வர் ஸ்டாலின் காலையிலேயே வருகை தந்தார்.

நலத்திட்டம்: கோவை விமான நிலையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிறகு விழாவில், ஒரே நேரத்தில், 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்...
கோவை அரசு மருத்துவமனையில், "ஜைக்கா" திட்டத்தில் ரூ.164 கோடியில் கட்டியுள்ள புது கட்டடத்தை திறந்து வைத்தார்.. மொத்தத்தில், கோவையில் ரூ.560 கோடி மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
இவ்விழாவில், அமைச்சர்கள், கலெக்டர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), பொள்ளாச்சி சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின்: இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "எம்பி தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்வது நிச்சயம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி, காலை உணவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர், இன்னுயிர் காப்போம், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம்.
முத்திரை திட்டம்: மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை. பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய சரியான காலம் வந்துவிட்டது.
பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்கமுடியுமா கஞ்சா, குட்கா, மாமுல் பட்டியலில் அமைச்சரும் டிஜிபியும் இருந்தது யார் ஆட்சியில்?
தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரங்கள். குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுத்தவர்கள் தான் இன்று உத்தமர் வேடம் போடுகின்றனர்.
விசாரணை: மாமூல் வாங்கியவர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயரும், போலீஸ் டிஜிபி பெயரும் இருந்தது அதிமுக ஆட்சி. அந்த வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் தடுப்பவர்கள்தான் இன்றைக்கு உத்தமர்கள் போல பேசுகின்றனர்.
தமிழகத்துக்கு செய்துள்ள சிறப்புத் திட்டங்களை பிரதமர் மோடி பட்டியலிட தயாரா? நாட்டு மக்களுக்கு எதையும் செய்திடாத பிரதமர், பக்கம் பக்கமாக வாக்குறுதி தந்து கொண்டிருக்கிறார்.. ஒன்றிய அரசு திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் உரைக்கிறார். பொய்யும், வாட்ஸ் அப் கதைகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு.
பாஜக: அதிமுக, பாஜக மக்களை ஏமாற்ற பிரிந்ததுபோல் நடிக்கிறார்கள். ஆனால், அதிமுக, பாஜக இடையே கள்ளக்கூட்டணி உள்ளது.. இதற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. " என்றார் முதல்வர் ஸ்டாலின்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications