மழை நீர் ஒரு இடத்துல கூட தேங்கக் கூடாது.. வந்த இடம் தெரியாமல் வடிந்துவிட வேண்டும்.. முதல்வர் அறிவுரை
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார். பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது.
இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையை தொடங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முடிக்க வேண்டும். 2 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகளால் மழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. பருவமழை காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மழை நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சாலைகள் சரியில்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மழை நீர் வடிகால்களை தூர்வார வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை நான் விரைவில் ஆய்வு செய்யவுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப் பணி - நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications