தமிழகத்தில் இனி ஏழைகளே இல்லை! தங்கம் அறிவித்த சூப்பர் திட்டம்.. அதென்ன தாயுமானவர் திட்டம்?
சென்னை: தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தனது முதல் முழு பட்ஜெட்டை 7 அம்சங்களுடன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவர் தனது உரையில் முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்திற்கே பெருமை. காலத்தால் நிலைத்து நிற்கும் திட்டங்களால்தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது. கருணையும் நிதியும் ஒரு சேர சேரும் போதெல்லாம் தமிழகம் வளம் பெறுகிறது. பட்ஜெட்டை தயாரிக்க அண்ணாவின் சொல்லோவியம் உதவியது.
100 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தமிழகத்தை தலைநிமிரச் செய்தன. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924 ஆம் ஆண்டு நடந்த நிதிநிலை அறிக்கையில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது.
1990 ஆம் ஆண்டு கருணாநிதி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்திருந்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடிசைகளே இல்லாத வகையில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அத அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 2.2 சதவீதம் மட்டுமே என அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக் கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.
ஆதரவற்றோர் தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். முதல்வரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் இந்த புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications