எந்த லெவலில் சி.எம்.டி.ஏ.பணிகள்? அதிகாரிகளிடம் கேள்விக்கணைகளை வீசிய அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதது குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் ஆலோசனைக் கூட்டத்தின் போது கேள்விக்கணைகளை அதிகாரிகளிடம் வீசினார் அமைச்சர் சேகர்பாபு.
இது தொடர்பான விவரம் வருமாறு;

சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் இன்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு தலைமையில், கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் மூன்றாவது முழுமைத் திட்டம் - தொலைநோக்கு, நில சேர்மம், தள பரப்புக் குறியீடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நீதிமன்ற வழக்குகள் நிலவரம், வரன்முறை திட்டம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் குறித்தும் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடைபெற்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications