சொந்த ஊர் போவோர் நோட் பண்ணுங்க.. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்
சென்னை: வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரெடியாகிவிட்டனர். இன்று மாலை முதலே சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் சாதி மதங்களைக் கடந்து பலரும் கொண்டாடும் பண்டிகை என்றால் தீபாவளி தான். இந்தாண்டு வரும் வியாழக்கிழமை அதாவது அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி: பொதுமக்கள் இதற்காகப் புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் வாங்கி ரெடியாகிவிட்டனர்.. சென்னையில் வசிக்கும் மற்ற ஊர் மக்கள் தீபாவளிக்கு மட்டும் கண்டிப்பாகச் சொந்த ஊர்களுக்குச் சென்றே கொண்டாடுவார்கள். இந்தாண்டு வியாழக்கிழமை தீபாவளி வரும் நிலையில், அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள்: இதனால் வியாழன் தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு லீவ் தான். தீபாவளி+ இந்த லாங் வீக் எண்ட்டை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடச் சென்னையில் வாழும் பிற மாவட்ட மக்கள் ரெடியாகிவிட்டனர். குறிப்பாகச் சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர் நோக்கியும் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
சிறப்பு ரயில்கள்: இன்று மாலை முதலே சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவார்கள். இதற்காகச் சிறப்பு பஸ், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை முதலே பல்வேறு இடங்களிலும் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள்: இதற்கிடையே தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ரயில்கள்: தற்போது இரண்டு வழித்தடங்களிலும் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படுகிறது. மாலை முதல் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது பிற்பகலுக்கு மேல் பயணிகள் எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து படிப்படியாக மெட்ரோ சேவை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது..
பஸ், ரயில்களைப் போலவே மெட்ரோவிலும் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. தடையை மீறி யாராவது பட்டாசுகளை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications