இனி "கட்டிடங்களுக்கு" ஆப்பு.. கடலோரங்களில் மாற்றம்.. தமிழக மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அதிரடி
சென்னை: தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்டவருக்கு நோட்டீஸ் வழங்கி, விசாரணையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடலோர பகுதிகளில் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் வைத்து, வளர்ச்சி திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் அவ்வப்போது விதிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டு மத்திய அரசு, புதிய விதிகளை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், கடந்த 2011ல் வகுக்கப்பட்ட விதிகள் தான் தமிழகத்தில் அமலில் இருந்தன.. இதன் அடிப்படையிலேயே கட்டுமான திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டும் வந்தன.

கட்டுமான திட்டங்கள்: இதற்காக, மாவட்ட மற்றும் மாநில அளவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோர், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, இந்த குழுமங்களில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இதில் விண்ணப்பம், இணைப்பு ஆவணங்களை சரிபார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அடிப்படையான விஷயமாகும்.
இந்நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறையை தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தற்போது தயாரித்துள்ளது.
விதிமீறல்கள்: மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் 128-வது கூட்டம் சமீபத்தில் நடந்தபோது, தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை, விதிமீறல் வழக்குகளை கையாளும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப்பகுதிகளில் விதிகளை கருத்தில் கொள்ளாமல், நகர ஊரமைப்பு இயக்ககம் உள்ளிட்ட உள்ளூர் திட்டக்குழுமங்கள், சில ஊராட்சி தலைவர்கள் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதாகவும், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தில் அதிக பணியாளர்கள் இல்லாததால், இவைகளை கண்காணிக்க முடியவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
வரைவு அறிக்கை : இதையடுத்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. இதற்கு காரணம், சுற்றுச்சூழல் துறைக்கென, 25 வருடங்களாக பிரத்யேகமாக எந்தவொரு மண்டல, மாவட்ட அலுவலகமும் இல்லை.. மாவட்ட கடற்கரை மண்ட மேலாண்மை ஆணையத்துக்காக, தனியான அதிகாரமும் இல்லை. விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. அதனால், வழிகாட்டு நெறிமுறைகள் தேவையாக இருக்கின்றன.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு கடந்த மே 8ம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பதால், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களை கையாள, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வகுக்கப்பட்டிருக்கின்றன.. இதையொட்டி, வரைவு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- விதிமீறல் தொடர்பாக பெறப்படும் புகார்களை துறையின் ஜிஐஎஸ் செல் மூலம், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் அந்த பகுதி வருகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
- விதிமீறல் கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணைய தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- அந்த அறிக்கையின் அடிப்படையில், கடற்கரை மண்டல மேலாண்மை வரைபடத்துடன் ஒப்பிட்டு பார்த்து, விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
- மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் விதிமீறல் நடைபெற்றிருப்பதை கண்டறியும் பட்சத்தில், மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த அறிக்கையை மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- இந்த தீர்மானத்தின் படி விதிமீறலில் ஈடுபட்டவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
- விதிமீறலில் ஈடுபட்டவரின் பதில் திருப்திகரமாக இல்லையென்றால் விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறை ஏற்கப்படும் பட்சத்தில், விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications