மத்திய அரசு காலதாமதம்.. மதுரை, கோவை மெட்ரோ DPRக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை.. ஷாக் பின்னணி
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கைக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டங்களுக்கான DPR அறிக்கை சமர்பிக்கப்பட்டாலும் அது இன்னும் மத்திய அரசின் தொடக்க கட்ட ஆய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோயம்புத்தூர் மெட்ரோ
கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் அருகிலுள்ள கோயம்புத்தூர் விமான நிலையம் வரை நீண்டுள்ள முதல் வழித்தடமும், கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வாலியம்பாளையம் பிரிவு வரை நீண்டுள்ள இரண்டாம் வழித்தடமும் அடங்கும். இந்த வழித்தடங்களின் மொத்த நீளம் 40 கி.மீ., இதன் மதிப்பிடப்பட்ட செலவு ₹10,740 கோடி ஆகும்.

டெக்ஸ் டூல்ஸ் பாலம் முதல் சூரியா மருத்துவமனை வரையிலான 1.4 கி.மீ. நீளத்திற்கு அவசர நிலத் திட்ட அட்டவணை (LPS) தயாரிக்கப்பட்டு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதி ஒரு நெரிசல் நிறைய பகுதியாகும். முன்பு, தேவையான நிலம் 20 மீட்டர் அகலமாக குறிப்பிடப்பட்டது. எல்.பி.எஸ். நிறைவடைந்த பிறகு, அது 30 மீட்டராக திருத்தப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதனால் நெரிசல் ஏற்படுகிறது.
1.4 கி.மீ. நீளப் பகுதிக்கு, நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ திட்டம் ஆகிய இரண்டிற்கும் 2.28 ஏக்கர் தனியார் நிலமும், 0.58 ஏக்கர் அரசு நிலமும் தேவைப்படும். மொத்தம் 40 கி.மீ. தூரத்திற்கான இரு வழித்தடங்களுக்கான முதன்மை நிலத் திட்ட அட்டவணை (LPS) நிறைவடைந்துள்ளதாகவும், நிர்வாக ஒப்புதல் (AS) ஆவணங்கள் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
மதுரை மெட்ரோ
சென்னையில் உள்ளதை போன்று மதுரையில் மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels) செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.
இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டுஉள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.
திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.
மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications