ஒன்இந்தியா செய்தி எதிரொலி.. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு காலனியை வழங்கிய கோவை ஆட்சியர்.. நெகிழ்ச்சி
சென்னை: கோவையில் காலனி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கோயம்புத்தூர் ஆட்சியர் சமீரான் காலனி வழங்கி உள்ளார். மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு வழங்கப்பட்ட காலனியை அதிகாரிகள் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வேல்முருகன். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார். வறுமையான பின்னணியை கொண்ட தனது மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாக வடிவமைக்கப்பட்ட காலனி வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் அந்த சிறுவனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான காலனியை வாங்கிக்கொடுத்தார்.

வைரல்
காலனியை வாங்கிக்கொடுத்தது மட்டுமின்றி அந்த சிறுவனுக்கு ஆட்சியர் தன் கையால் காலனியை அணிவித்தார். அந்த சிறுவனிடம் அன்பாக பேசிக்கொண்டே, அவனுக்கு கோவை ஆட்சியர் காலனி மாட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆட்சியரின் இந்த செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

ஆனால் கிடைக்கவில்லை
ஆனால் ஆட்சியர் சென்ற பின் அந்த காலனியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காலனியை திரும்ப பெற்றுள்ளனர். இரண்டு மாதம் முன்பு இப்படி காலனியை பழுது பார்க்க அதிகாரிகள் வாங்கி உள்ளனர். ஆனால் அதன்பின் இரண்டு மாதமாக காலனியை திருப்பி கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து அந்த சிறுவனின் தந்தை வேல்முருகன் நேற்று உருக்கமான கோரிக்கை விடுத்து இருந்தார்.

கோரிக்கை
அதில், என்மகனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை திரும்பி பெற்றுக்கொண்டனர். அதிகாரிகள் பழுது பார்ப்பதாக கூறி வாங்கினார்கள். ஆனால் இப்போது திருப்பித்தர மறுக்கிறார்கள். என்னுடைய மாற்று திறனாளி மகன் காலனி இன்றி சிரமப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. என் மகனுக்கு காலணியை திரும்ப வழங்க வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழில் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த சிறுவனுக்கு காலனி கிடைக்கவில்லை என்பதை "இது அவருக்கு தெரியுமா?.. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனி.. பிடுங்கிய அதிகாரிகள் " என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

உதவி
இந்த நிலையில் ஒன் இந்தியாவின் செய்தியை அடுத்து கோயம்புத்தூர் ஆட்சியர் சமீரான் துரிதமாக செயல்பட்டு அந்த சிறுவனுக்கு மீண்டும் காலனி கிடைக்க உதவி செய்துள்ளார். இது தொடர்பாக நம் ஒன்இந்தியா தமிழ் ஊடகத்திற்கு விளக்கம் அளித்த கோயம்புத்தூர் ஆட்சியர் சமீரான், அந்த காலனியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பெற்றோரார்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடை
இதனால் காலனியில் மாற்றம் செய்வதற்காக அதை கடைக்கு எடுத்து சென்று இருந்தனர். ஆனால் அங்கே தாமதம் ஆகிவிட்டது. இந்த விஷயம் எனக்கு தெரிந்தவுடன் உடனடியாக செயல்பட்டு தவறு சரி செய்யப்பட்டது. அதோடு நேற்று மாஸ்டர் அழகுமலைக்கு அந்த காலனி உடனடியாக திருப்பி வழங்கப்பட்டது.

விளக்கம்
நான் அந்த சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து அவர்களுக்கு ஏற்பட்ட இடையூருக்கு என் வருத்தத்தை வெளிப்படுத்தினேன், என்று கோயம்புத்தூர் ஆட்சியர் சமீரான் தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா தமிழ் ஊடகத்தில் செய்தி வந்தவுடன் வேகமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கோயம்புத்தூர் ஆட்சியர் சமீரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆட்சியரின் இந்த துரிதமான நடவடிக்கை மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-
சூலூர் சிறுமி வழக்கு.. சரியான ரூட்டில்தான் போகிறது.. தமிழக அரசை மெச்சிய உயர் நீதிமன்றம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications