இது அவருக்கு தெரியுமா?.. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனி.. பிடுங்கிய அதிகாரிகள்
கோயம்புத்தூர்: கோவையில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வேல்முருகன். இவர் போத்தனூர் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மிகவும் வறுமையான பின்னணியை கொண்ட இவர் தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்.
அதோடு தனது மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான காலனி வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான காலனி வாங்க போதிய பணம் இல்லை, நீங்கள்தான் அரசு சார்பாக வாங்கி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கை ஏற்பு
இந்த நிலையில் வேல்முருகன் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான், அந்த சிறுவனுக்கு காலனி வாங்கிக்கொடுத்தார். அதோடு அந்த சிறுவனுக்கு தன் கையால் காலனியை அணிவித்தார். நீ என்ன படிக்கிற என்று பேசிக்கொண்டே.. சிறுவனின் காலை பிடித்து அவருக்கு காலனி போட்டுவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி ஆட்சியரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

வைரல்
உனக்கு புது ஷூ கிடைச்சு இருக்கு. இனிமே நீ சந்தோசமா இருக்க வேண்டும். இனி நிறைய நடக்கலாம். ஓடலாம் என்று குறிப்பிட்டார். அதோடு உன்னுடைய மாஸ்க் நன்றாக இருக்கிறது, யார் வாங்கிக்கொடுத்தது என்று அந்த சிறுவனிடம் நட்பாக பேசி ஆட்சியர் சமீரான் தன்மையாக நடந்து கொண்டது பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் ஆட்சியர் சென்ற பின் அந்த காலனியில் சிறிய பழுது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பழுது
ஆட்சியர் காலனி அணிவித்த நிகழ்வு முடிந்ததும், காலனியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் திரும்ப பெற்றுள்ளனர். இரண்டு மாதம் முன்பு இப்படி காலனியை பழுது பார்க்க அதிகாரிகள் வாங்கி உள்ளனர். ஆனால் இப்போது வரை காலனியை திருப்பி கொடுக்காமல் இரண்டு மாதமாக அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக வேல்முருகன் குற்றம் சாட்டி உள்ளார். கோவை ஆட்சியருக்கு இந்த விஷயம் தெரியாது என்று கூறப்படுகிறது.

வேல்முருகன் பேட்டி
இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், என்மகனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை திரும்பி பெற்றுக்கொண்டனர். அதிகாரிகள் பழுது பார்ப்பதாக கூறி வாங்கினார்கள். ஆனால் இப்போது திருப்பித்தர மறுக்கிறார்கள்.

வருத்தம்
என்னுடைய மாற்று திறனாளி மகன் காலனி இன்றி சிரமப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் எங்களுக்கு பதில் அளிக்க மறுக்கிறார்கள்., என் மகனுக்கு காலணியை திரும்ப வழங்க வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications