தேசிய விருது அறிவித்ததும் கதறி அழுத மகாராஜா சாச்சனா.. நெகிழ வைத்த காரணம்.. உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழ் சினிமா முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. அமரன், ராயன், மகாராஜா படங்கள் விருதுகளை குவித்த நிலையில் ரசிகர்களை மிகவும் நெகிழ வைத்த காட்சியும் வெளியாகி இருக்கிறது. மகாராஜா படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சாச்சனா நமிதாஸ் கதறி அழுத வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தான் அழுத வீடியோவை சாச்சனாவே தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் தேசிய விருது அறிவிப்பு நேரலையில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. அப்போது "Best Actress in Supporting Role - Sachana Namidass" என்று அவருடைய பெயரை சொன்னதும் தன்னுடைய எமோஷனலை கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுதிருக்கிறார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் சொல்கின்றனர். பிறகு அவருக்கு ஸ்வீட் கொடுத்து அந்த வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர். அந்த காட்சிகளும் அந்த வீடியோவில் இருக்கிறது.

Sachana Namidass Maharaja Vijay Sethupathi National Film Awards

சாச்சனா பதிவு

இதை பார்த்ததும் பல ரசிகர்கள் இந்த கண்ணீர் தான் உண்மையான வெற்றியின் அடையாளம். முதல் படத்திலேயே தேசிய விருது சாதாரண விஷயம் இல்லை என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சாச்சனா வெளியிட்ட பதிவில், "கனவு காண துணிந்த அந்த சின்ன வயசு பெண் தனது முதல் படமே தேசிய விருதை வீட்டுக்கு கொண்டு வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த அங்கீகாரத்திற்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டவளாக இருப்பேன்" என்று எமோஷனலாக கூறி இருக்கிறார்.

இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் அதை ஆயிரக்கணக்கான ரசிகர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சாச்சனா

கேரளாவில் சேர்ந்த சாச்சனா சின்ன வயதிலேயே நடிக்க வேண்டும் என்று முயற்சிகள் செய்திருக்கிறார். அதுவும் இவர் சினிமாவிற்கு வர வேண்டும் என்பது அவருடைய பெற்றோரின் ஆசை தானாம். அது தனக்கும் பிடித்ததால் அதையே தேர்ந்தெடுத்திருக்கிறார். விளம்பரங்கள் மாடலிங்கில் களம் இறங்கி பிறகு அதன் மூலம் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார்.

தேசிய விருது ஜுரியில் பெருமை சேர்த்த 2 தமிழர்கள் யார்? படங்களை தேர்வு செய்வதில் இத்தனை விஷயம் இருக்கிறதா?
திரைப்படத்தில் அதிகமான நேரம் அவர் வரவில்லை என்றாலும் அப்பா மகள் பாசத்தை இயல்பாக வெளிப்படுத்தி அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் வரும் எமோஷனல் காட்சிகளில் சாச்சனாவின் நடிப்பு தனியாக பாராட்டப்பட்டது. இப்போது தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதும் வாங்கி இருப்பது அவருடைய நடிப்பின் மைல்கல்லாக மாறி இருக்கிறது.

Sachana Namidass Maharaja Vijay Sethupathi National Film Awards

மகாராஜா படத்தின் வெற்றி

விஜய் சேதுபதி தன்னுடைய ஐம்பதாவது படமாக நடித்த மகாராஜா படம் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதலில் சாதாரண பலி வாங்கும் கதையாக தொடங்கும் படம் கடைசியில் எதிர்பாராத திருப்பதால் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

குறிப்பாக சாச்சனாவை மையமாகக் கொண்ட கதையின் உண்மை வெளிவரும் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அதுபோல இந்த வருஷம் தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமா நல்ல முக்கிய பங்கு வகிக்கிறது.

அதில் 'ராயன்' - சிறந்த தமிழ் திரைப்படம்.

தனுஷ் - 'கேப்டன் மில்லர்' படத்திற்காக Special Mention.

'அமரன்' - சிறந்த இயக்குநர் (ராஜ்குமார் பெரியசாமி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி. பிரகாஷ் குமார்), சிறந்த எடிட்டிங் (ஆர். கலைவாணன்).

சச்சனா நமிதாஸ் - 'மகாராஜா' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது (Best Supporting Actress) வழங்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+