தேசிய விருது ஜுரியில் பெருமை சேர்த்த 2 தமிழர்கள் யார்? படங்களை தேர்வு செய்வதில் இத்தனை விஷயம் இருக்கிறதா?
சென்னை: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதும் எந்த நடிகர் விருது வாங்கினார்? எந்த படம் வென்றது? என்பது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்த விருதுகளை யார் தேர்வு செய்கிறார்கள்? எந்த அடிப்படையில் ஒரு படம் தேசிய விருதுக்கு தேர்வாகிறது? அந்த ஜூரி குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்ற கேள்விகளோ பலருக்கும் இருந்தது.
அதற்கு தற்போது தேசிய விருது ஜூரி குழுவில் இடம் பெற்ற இயக்குனர் இவி கணேஷ் பாபு அளித்துள்ள விளக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
72 ஆவது தேசிய திரைப்பட விருது
72வது தேசிய திரைப்பட விருதுகளை ஜூரி குழுவில் தமிழகத்தில் இருந்து இரண்டு முக்கிய பிரபலங்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். முழு நீள திரைப்படங்கள் பிரிவில் பிரபல டான்ஸ் இயக்குனர் கலா மாஸ்டர் ஜூரியாக இருந்திருக்கிறார். அதேபோல குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் படங்கள் பிரிவில் இயக்குனர் இவி கணேஷ் பாபு ஜூரி உறுப்பினராக இருந்திருக்கிறார். ஒரு தேசிய விருதுக்கு பின்னால் இருக்கும் தேர்வு நடைமுறைகளைப் பற்றி அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் இவி கணேஷ் பாபு விளக்கம்
இவி கணேஷ் பேசும்போது, முழு நீள திரைப்படங்கள் மட்டும் சுமார் 400 படங்கள் வந்திருக்கின்றன. குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் சேர்த்து 160 க்கும் மேற்பட்ட படங்கள் வந்திருந்தன. மாத கணக்கில் இரவு பகல் பாராமல் படங்களை பார்த்துக்கொண்டே இருந்தோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமான 22 மொழிகளில் இருந்தாலும் நடைமுறையில் 35க்கும் மேற்பட்ட மொழிகளில் படங்கள் விருதுக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு தேசிய விருது தேர்வு எளிமையான வேலை இல்லை என்று கூறியவர். ஒரு ஸ்கூலில் இருக்கும் மாணவர்களில் சிறந்த மாணவரை தேர்வு செய்யும் போது மற்ற மாணவர்கள் வருத்தப்படுவார்களோ என்று ஆசிரியர்கள் நினைப்பார்கள். அதே மனநிலையில் தான் நாங்களும் இருந்தோம் என்று எமோஷனலாக கூறினார். மேலும் அதாவது ஒரு நல்ல படத்திற்கு விருது கிடைத்தால் மகிழ்ச்சி, அதே நேரத்தில் விருது கிடைக்காமல் போகும் மற்ற பல சிறந்த படைப்பாளிகளின் உழைப்புக்கும் மனதில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தேர்வு தேசிய விருது தேர்வு நடைமுறை
அதுமட்டுமல்லாமல் பலரும் நினைப்பது போல ஜூரி உறுப்பினர்கள் கை தூக்கி வாக்களித்து விருது கொடுப்பதில்லை என்றும் அது ஒரு சுவாரசியமான கதை என்றும் அதைப் பற்றியும் விளக்கி இருக்கிறார். 10 பேர் இருக்கும் ஜூரி குழுவில் ஒன்பது பேருக்கு ஒரு படம் பிடித்திருந்தாலும் ஒருவருக்கு அந்த படத்தில் இருக்கும் குறைகள் முக்கியமாக நினைத்தால் அந்த படத்திற்கு விருது கிடைக்காமல் போகலாம்.
3 தேசிய விருதுகளை அள்ளிய அமரன்.. ஆனால் சாய் பல்லவிக்கு மட்டும் இல்லையா? ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி
அதேபோல் 9 பேருக்கு பிடிக்காத படமாக இருந்தாலும் ஒருவருக்கு அந்த படத்தின் சிறப்பு மீது உறுதியாக நம்பிக்கை இருந்தால் அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்து அந்த படத்துக்கு விருது வாங்கி கொடுக்கவும் முடியும் என்று கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருது கொடுக்கும்போது எதையெல்லாம் பார்ப்பார்கள் தெரியுமா? தேசிய விருது தேர்வில் நடிப்பு மட்டும் முக்கியமல்ல. படம் அந்த ஆண்டில் சென்சார் செய்ய செய்யப்பட்டிருக்க வேண்டும். அதே கதையை வேறு மொழிகளில் இன்னும் சிறப்பாக யாராவது சொல்லி இருக்கார்களா? என்று பார்க்கப்படும். கதை, திரைக்கதை, தொழில்நுட்பம், கலைநயம் என அனைத்தும் கவனித்து பார்க்கப்படும்.
தேசிய விருது ஜூரி
மேலும் நடிகர்கள் அல்லது நடிகைகள் பிரிவுகளிலும் தயாரிப்பு நிறுவனம் எந்த பிரிவில் விண்ணப்பித்திருக்கிறதோ அதற்கு ஏற்ப தான் பரிசீலனை நடைபெறும் என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
ஒவ்வொரு வருஷமும் தேசிய விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவருக்கு ஏன் கொடுக்கவில்லை? இவருக்கு ஏன் கொடுத்தார்கள் என்று விவாதங்கள் எழுவது வழக்கம். ஆனால் அந்த ஒரு விருதுக்கு பின்னால் மாதக்கணக்கில் நூற்றுக்கணக்கான படங்களை பார்த்து பலமொழிகளில் இருந்து வந்த படங்களை ஒப்பிட்டு ஒவ்வொரு காட்சியும் விவாதித்து எடுக்கப்படும் முடிவுதான் என்பதை இ வி கணேஷ் சொல்லி இருக்கிறார். ஆனாலும் இந்த முறை ராயன் படத்திற்கு கிடைத்த விருது ஏன் மெய்யழகன் படத்தில் கிடைக்கவில்லை? என்று பல ரசிகர்கள் நேற்றிலிருந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
