விஜய் பேச்சை துளியும் மதிக்கல.. அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: முதல்வர் விஜய் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தேவையின்றி யாரும் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டாம் என கூறியிருந்த போது, அதனை துளியும் மதிக்காத வகையில் தர்மபுரி மாவட்டம் பென்னெகரம் தவெக எம்.எல்.ஏ கஜேந்திரன் அரசு பள்ளியில் ஆய்வு செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த பிறகு, அக்கட்சியினர் சிலர் நடந்து கொள்ளும் விதம் தலைமைக்கு தலைவலி கொடுப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்துகிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு ஊழியர்களுக்கு இடையூறு செய்வது, பள்ளிகளில் மாணவர்களின் படிப்புக்கு தொந்தரவு செய்யும் விதமாக ரீல்ஸ் எடுத்து விஜய் படத்தை மாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

school inspection

ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்.எல்.ஏ

தவெக நிர்வாகிகள் மட்டும் இன்றி அமைச்சர்கள் சிலர் கூட இதுபோன்று ரீல்ஸ் எடுத்து வந்ததால், எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து, முதல்வரும் தவெக தலைவருமான விஜய் தனது கட்சியினருக்கு கண்டிப்பான உத்தரவு ஒன்றை போட்டார். இனி அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி ரீல்ஸ் வெளியிடக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டு இருந்தார். ஆனால் விஜய்யின் இந்த அறிவுறுத்தலை துளியும் மதிக்காத தவெக நிர்வாகிகள் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக தர்மபுரி மாவட்டம் பென்னெகரம் தவெக எம்.எல்.ஏ கஜேந்திரன் அரசு பள்ளியில் ஆய்வு செய்து வெளியிட்ட ரீல்ஸ் ஒன்று விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எம்.எல்.ஏ கஜேந்திரன் பென்னகரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறை, சத்துணவுக் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விஜய், ராஜ்குமார் எச்சரித்து இருந்தனர்

பெரும்பாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மணவ மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை சென்று நலம் விசாரித்த எம்.எல்.ஏ கஜேந்திரன் அதையும் ரீல்ஸ் ஆக எடுத்து பதிவிட்டு இருந்தார். அரசு பள்ளிகளுக்கு தேவையில்லாமல் ஆய்வு செல்லக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனாலும் முதல்வர் விஜய், அமைச்சர் அறிவுறுத்தல்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு தவெகவினர் ரீல்ஸ் எடுப்பது தொடர்கதையாகி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அரசு பள்ளி, மருத்துவமனைகளில் ஏதேனும் குறைகள் இருப்பதை மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை.. ஆனால் ரீல்ஸ்க்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மாணவர்களுக்கு கவன சிதறலை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கல்வியாளர்களும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். அரசியல் அரங்கிலும் தவெகவினரின் செயல்பாடுகள் விமர்சனத்தை சந்தித்து வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+