ராதா மகளா இது? “கோ” பட நடிகை வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. கணவருடன் சந்தோஷத்தை பகிர்ந்த கார்த்திகா
சென்னை: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா வெளியிட்டு வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த கார்த்திகா இப்போது தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார். அதை தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே நடிகை ராதா குடும்பத்தில் தொடர்ந்து மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. முதலில் மகள் கார்த்திகா நாயரின் திருமணம். அதற்குப் பிறகு தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடந்தது. தன் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை வீடியோக்களாக பகிர்ந்து வரும் ராதா தன்னுடைய மகள் புதியதாக கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்த வீடியோவையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகை ராதாவின் மூத்த மகள்
ராதாவின் மூத்த மகளான கார்த்திகா தன் கணவர் ரோஹித் மேனன் உடன் தனது புது வீட்டின் கிரகப்பிரவேசத்தை செய்துள்ளார். ஆனால் இந்த பூஜை மிகவும் எளிமையாக குடும்பத்தினரின் முன்னிலையில் மட்டும் நடைபெற்று இருக்கிறது. அந்த வீட்டில் கணவன் மனைவி இருவரும் பூஜையில் கலந்து கொண்ட போது எடுத்த வீடியோஸ் மற்றும் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் போன்றவற்றையும் ராதா பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை கார்த்திகா நாயர் திருமணம்
நடிகை கார்த்திகா நாயருக்கு தொழிலதிபர் ரோஹித்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய கார்த்திகா உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
ஆளே மாறிய கார்த்திகா
சமீபத்தில் ராதாவின் அம்மா இறப்பின் போது கார்த்திகா மற்றும் அவருடைய தங்கச்சி துளசி இருவருடைய புகைப்படங்களும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்திகா லண்டனில் படித்திருந்தாலும் முதலில் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த கோ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கார்த்திகா வீட்டில் விசேஷம்
முதல் படமே அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதனால் கார்த்திகாவுக்கு அடுத்தடுத்த பலமொழிகளிலும் வாய்ப்பு வந்தது. தமிழில் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, தெலுங்கு, மலையாளம் உட்பட பலமொழிகளின் நடித்தார். ஆனால் அம்மா ராதாவைப் போல ரொம்ப நாட்கள் சினிமாவில் தொடராமல் சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
நடிகை கார்த்திகா நாயர் வீட்டில் விசேஷம்.. வாழ்த்து தெரிவித்த அம்மா ராதா.. க்யூட்டான கேப்ஷன்
அதுபோல ராதாவின் இளைய மகள் துளசியும் நடிகையாக அறிமுகமானார். மணிரத்தினம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக கடல் படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு பிறகு அவரும் சினிமாவை விட்டு விலகி விட்டார். இந்த நிலையில் தான் இப்போது கார்த்திகாவின் வீட்டு கிரகப்பிரவேச வீடியோ சோசியல் மீடியாவில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.













Click it and Unblock the Notifications