நடிகை கார்த்திகா நாயர் வீட்டில் விசேஷம்.. வாழ்த்து தெரிவித்த அம்மா ராதா.. க்யூட்டான கேப்ஷன்
சென்னை: நடிகை ராதாவின் மகளான கார்த்திகா நாயர் குறித்து ராதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அந்த பதிவில் நடிகை கார்த்திகா நாயர் தன்னுடைய கணவரோடு இருக்கும் புகைப்படத்தை ராதா பகிர்ந்து இருக்கிறார்.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் நடிகை ராதா புகழின் உச்சத்தில் இருந்தார். அதிலும் அவருடைய அக்கா அம்பிகாவோடு சேர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல நடிகர்களோடு ராதாவும் அவருடைய அக்காவும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தை சார்ந்த பலர் நடிகர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ராதாவின் குடும்பமும் உண்டு. ராதா மற்றும் அவருடைய அக்காவை போலவே ராதாவின் மகள்களும் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் ராதா மற்றும் அம்பிகா போல ராதாவின் மகள்களால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
வெள்ளிதிரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை விட்டு வைக்காமல் ராதாவும் அவருடைய அக்கா அம்பிகாவும் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அடுத்த வாரத்தில் விஜய் டிவியின் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்த முறையும் நடுவராக ராதா கலந்து கொண்டிருக்கிறார். ராதா டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து வருகிறார்.
அதே நேரத்தில் அம்பிகா பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட சன் டிவியில் மல்லி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதற்கு முன்பு அருவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார் அதுபோல நடிகை ராதிகா புகழின் உச்சத்தில் இருக்கும்போது ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதற்கு பிறகு அவருக்கு கார்த்திகா விக்னேஷ் துளசி என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் "கோ" திரைப்படத்தில் அறிமுகம் ஆகி இருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் கார்த்திகாவிற்கு பிரபலத்தை கொடுத்தது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கார்த்திகா நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.
அதுபோல ராதாவின் கடைக்குட்டி மகளான துளசியும் தமிழ் சினிமாவில் கடல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 2023 ஆம் ஆண்டில் ராதா தன்னுடைய மகள் கார்த்திகா நாயருக்கு ரோஹித் மேனன் என்பவரோடு திருமணத்தை நடத்தி வைத்திருந்தார். தன்னுடைய மருமகன் குடும்பத்தை பற்றி பெருமையாக சமூக வலைத்தள பக்கங்களில் ராதா பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதா தன்னுடைய மகள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய மகள் கார்த்திகா நாயரும் அவருடைய கணவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராதா அந்த பதிவிற்கு "உங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் இது போன்ற அற்புதமான நினைவுகளால் நிரப்பப்படட்டும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கார்த்திகாவின் பிறந்தநாளுக்கு அவர்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் அவருடைய கணவரோடு கார்த்திகா எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ராதா வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பலரும் கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்து ராதாவை பாராட்டியும் வருகிறார்கள்.











Click it and Unblock the Notifications