Gold Rate Today: தட்டு தடுமாறும் தங்கம்.. "இது" மட்டும் நடந்தால் மிக பெரிய வீழ்ச்சி கன்பார்ம்! ஏன் தெரியுமா
சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தடுமாறி வருகிறது. 3 முதல் 4 நாட்கள் சரிந்தால்.. மீண்டும் ஒரு நாள் விலை ஏறுவது என்ற சூழலே இருக்கிறது. அப்படி தான் கடந்த சில நாட்களாக சரிந்த தங்கம் விலை நேற்று லேசாக உயர்ந்திருந்தது. இருப்பினும், சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை பலவீனமாக இருப்பதாகவே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவில் தங்கம் தான் எப்போதுமே ஏழை மக்களுக்கு முதல் முதலீடாக இருந்து வந்தது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு ஜெட் வேகத்தில் இந்த கொரோனா ஏற தொடங்கியது. கொரோனா, உலக பொருளாதாரம், போர் என பல காரணங்களால் கேப் விடாமல் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக எகிறியது. இதனால் ஏழை மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தங்கம் விலை
இந்தச் சூழலில் தான் இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலையில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது கேப் விடாமல் ஏறிய தங்கம் சட்டென நின்றுள்ளது. அதன் பிறகு வளைகுடாவில் போர் வெடித்த போதிலும் தங்கம் விலை ஏறவில்லை. தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்தே வருகிறது. வரும் காலங்களிலும் தங்கம் விலை சில மாதங்களுக்கு தொடர்ந்து சரியும் என்றே சொல்கிறார்கள்.
இப்போது தங்கம் விலை சரிய 2 பிரதான காரணங்கள் உள்ளன. முதலில் வளைகுடா போர். இந்த போரால் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது. கச்சா எண்ணெய் டாலரில் வர்த்தகம் செய்யப்படும் நிலையில், டாலர் மதிப்பு உயர்வதால் தங்கம் சரிகிறது. அதேபோல போரால் பணவீக்கம் அதிகரித்து வட்டி விகிதம் உயருமோ என்ற அச்சம் இருக்கிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டாலும் தங்கம் விலை சரியும்.
4000 மார்க்
சர்வதேச மார்கெட்டில் இப்போது தங்கம் விலை 4000 டாலரில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. 4000 என்பது தங்கத்திற்கு பயங்கர சப்போர்ட்டாக இருக்கிறது. 4000க்கு கீழ் போனாலும் எப்படியோ விலையை ஏற்றி விடுகிறார்கள். ஆனால், இது தற்காலிகமானது என்கிறார்கள் வல்லுநர்கள். சீக்கிரமே அந்த சப்போர்ட் மார்க்கை தங்கம் விலை உடைக்கும் என்றும் 4000ஐ வலுவாக உடைக்கும் போது தங்கம் விலை பெரியளவில் சரியும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தங்கம் விலை
சென்னையில் நேற்றைய தினம் தங்கம் விலை உயர்ந்தது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ. 1,05,080க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.13,135க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 235க்கு விற்கப்படுகிறது.
தங்கம் - கடந்து வந்த பாதை
18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440
14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200
13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600
12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400
11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400
10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800
9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560
8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600


Click it and Unblock the Notifications
