“கியாரே.. செட்டிங்கா? டெல்லியையே வேணாலும் கூட்டிவாங்க.. இது தமிழ்நாடுடா”- ஆதவ் அர்ஜுனா ஆவேசப் பேச்சு
சென்னை "கியாரே செட்டிங்கா.. என்ன வேணா செட்டிங் போடுங்க.. எங்க வேணும்னாலும் சேர்ந்துக்கோங்க.. யாரை வேணும்னாலும் வட இந்தியாவில் இருந்து கூட்டிட்டு வாங்க... இது தமிழ்நாடு டா!" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் சாதனை விளக்கக் கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், வெங்கடரமணன், ராஜ்மோகன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த்தை சீண்டியுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "உங்க மதவாத அரசியல் இங்கு எடுபடாது. கியாரே செட்டிங்கா? உங்க பட டயலாக்கை உங்களுக்கே நாங்க சொல்றோம்.. என்ன வேணா செட்டிங் போடுங்க.. எங்க வேணும்னாலும் சேர்ந்துக்கோங்க.. யாரை வேணும்னாலும் வட இந்தியாவில் இருந்து கூட்டிட்டு வாங்க... ஏன்.. டெல்லியையே கூட்டிட்டு வாங்க.. இது தமிழ்நாடு டா..!
பேசிப் பேசி வளர்ந்த கட்சி திமுக. இன்று பொய்யாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன மாதிரியான பொய்.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இப்போது எப்படி மாற்றிப் பேசுகிறார்கள் பார்த்தீர்களா? நம் அண்ணன், முன்பே இதற்கு ஒரு பதில் கொடுத்தார். முதல்வர் விஜய் ஒரு தீர்க்கதரிசி. மோடி காலிலும், அமித் ஷா காலிலும் திமுக விழுகிறதா இல்லையா என்று பாருங்கள் என அப்போதே அண்ணன் விஜய் பேசிவிட்டார்." எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
