தொகுதி மறுவரையறை மசோதா.. எத்தனை எம்பிக்கள் ஆதரவு கிடைக்கும்? ஆப்செண்ட் ஆகும் எம்பிக்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 371 எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவைப்படும் நிலையில் தற்போது 371 எம்.பி.க்கள் வரை குறைந்தது ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதால் இந்த மசோதாவை எளிதில் நிறைவேற்ற மத்திய அரசுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

நாளை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது. இதில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் இந்த மசோதவிற்கு மூன்றில் இரண்டு பெங்கு பெரும்பான்மை அவசியம். இதை வைத்து பார்க்கும் போது 356 வாக்குகளுக்கு மேல் அரசுக்கு தேவை உள்ளது.

Delimitation Bill How many MPs will extend their support to govt Which MPs will be absent

கடந்த முறை மசோதா கொண்டு வரப்பட்ட போது, பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், தற்போது, பல்வேறு கட்சிகளும் தங்கள் முடிவை மாற்றியுள்ளன. இதனால், சூழல் மாற வாய்ப்பு உள்ளது. அதாவது, மசோதாவுக்கு ஆதரவாக 371 எம்பிக்கள் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஆகிய கட்சிகள் தங்கள் முடிவை மாற்றி மாசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன.

நாடாளுமன்றத்தின் மொத்த பலம் 543. தற்போது 3 இடங்கள் காலியாக உள்ளது. இந்த வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்திலும் சில முக்கியமான எம்பிக்கள் பங்கேற்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யண் பானர்ஜி சஸ்பெண்டில் உள்ளார். அம்ரித்பால் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கண்னூர் தொகுதி எம்பி சுதாகரன் ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஷ்கர் மாநில பாஜக எம்பி லக்‌ஷ்மி வெர்மா விபத்தில் காயம் அடைந்து இருப்பதால் அவர் பங்கேற்பாரா? என்று தெரியவில்லை. வாக்குகள் சரிசமாமாக அதாவது 'டை' வந்தால் மட்டுமே சபாநாயகர் வாக்கு கணக்கில் வரும். இதன்படி, மத்திய அரசுக்கு 371 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 132-வது திருத்த மசோதா 2026 மற்றும் தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 ஆகியவற்றை லோக்சபாவில் சிரமம் இன்றி நிறைவேற்றுவதற்கு அரசுக்கு போதுமான பெரும்பான்மை ஆதரவு இருப்பதையே இது காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+