விஜய் அமைதியாக இருப்பது ஏன்? ஆதவ் அர்ஜுனா கொடுத்த புது விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம் முதல் தொகுதி மறுவரையறை வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் கருத்து தெரிவிக்காமல் முதல்வர் விஜய் அமைதியாக இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், விஜய் அமைதியாக இருப்பது ஏன்? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். 'நீங்கள் பேப்பரில் எழுதுவீர்கள்.. விஜய் செயல்பட்டு கொண்டு இருப்பார். எங்கள் அண்ணன் சொல் அல்ல செயல். அதனால்தான் அமைதியாக இருக்கிறார்..' என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

தவெக அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் அமைசச்ர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- நீங்கள் பேப்பரில் எழுதுவீர்கள்.. விஜய் செயல்பட்டு கொண்டு இருப்பார். எங்கள் அண்ணன் சொல் அல்ல செயல் . அதனால்தான் அமைதியாக இருக்கிறார். எங்க பேசனும் எப்படி பேசனும் என்று அவருக்கு தெரியும். மக்களிடமும் பெண்களுடனும் நேரடி தொடர்பில் இருக்கிறார். மக்களை அவர் நம்புகிறார். மக்களுக்காக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

Adhav Arjuna

உண்மையான ஜனநாயகன் விஜய்

பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக,. இன்று பொய்யாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன மாதிரியான பொய்.. (தொகுதி மறுவரையறை தொடர்பாக மு.க ஸ்டாலின் பேசிய வீடியோவை ஒளிபரப்பினார்) எப்படி அழகாக பேசினார்கள். இப்போது எப்படி மாற்றி பேசுகிறார்கள் பார்த்தீங்களா.. சிறுபான்மை மக்கள் வாக்களித்ததால்தான் திமுகவிற்கு 59 தொகுதிகள் கிடைத்தது.

சேப்பாக்கத்தில் ஜெயிச்சதற்கு காரணமே இஸ்லாமியர்களின் வாக்குகள். இல்லையென்றால் டெபாசிட் இழந்து இருப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டு இருப்பீர்களா? துரோகிகளா? 6 மாதத்திற்கு முன்பே விஜய் பதில் கொடுத்தார். தவெக நிலைப்பாடு என்ன? என்று சிலர் கேட்கிறார்கள். ஜனநாயகன் கடைசி படம் இல்லை. உண்மையான ஜனநாயகன் முதல்வராக விஜய் இருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு

நாங்கள் மட்டும்தான் கொள்கை தலைவர்கள் என்று சொன்னார்கள். இன்று பெரியாருக்கே விபூதி அடித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உக்காந்து கொண்டு பேசுற பேச்சை பாருங்க.. திமுக மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டுமில்லை. திமுக கடந்த 10 வருடமாக, வெற்றி பெறுவதற்கு காரணம் பாஜக எதிர்ப்பு மனநிலை. 75 வருட கட்சியே இன்று சரண்டர் ஆகிவிட்டது.

மாநிலத்திற்கு எந்த கட்சி இருக்கோ இல்லையோ நான் தனியாக நின்று நாட்டை காப்பாற்றுவேன் என்று விஜய் நிற்கிறார். இதுதான் வரலாறு.. ஜெயலலிதாவுக்கு பிறகு சிங்கம் மாதிரி விஜய்தான் தமிழ்நாட்டை காப்பாற்றுகிறார் என்று அதிமுகவினர் பேசுகிறார்கள். யாருக்கும் பயப்படவில்லை. விஜய் அமைதியாக இருப்பதால் ரொம்ப சாஃப்ட். என நினைக்கிறார்கள்.

விஜய் கோபத்தை எப்போது காட்டுவார் தெரியுமா?

அவர் எவ்வளவு பெரிய கோபக்காரர் என்பது உங்களுக்கு தெரியாது. அவர் கோபத்தை தேர்தலில் காட்டி முடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார். வட இந்திய ஆதிக்கத்தை எதிர்த்த தலைவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். எட்டப்பனுக்கே ஒரு அப்பனாக கலைஞரின் வாரிசு மாறியுள்ள தருணத்தை பார்க்கிறோம். அதுதான் வரலாறு.. வரலாறு எழுதும் திமுக இன்றோடு முடிந்துவிட்டது.

தேர்தல் அரசியலில் தவெக 65 - 70 சதவீதம் ஜெயிக்க போகுது. இந்த முடிவு மூலம் திமுகவை அழித்த வரலாறு முக ஸ்டாலினுக்கு வரலாறு எழுதி கொடுக்கும். எல்லா தலைவர்களும் வந்தது உங்க வீட்டில் காபி சாப்பிட்டுவிட்டு போகவா? இன்னொரு ஓபிஎஸ்தான் ஸ்டாலின். டெல்லியின் அடிமைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இபிஎஸ், ஓபிஎஸ், எம்கேஸ்.. மூன்று அடிமைகள். அதில் ஒரு அடிமை ஜெயலலிதா கஷ்டப்பட்டு முதல்வர் ஆக்கிய அடிமை. இன்னொன்று திமுகவில் சேர்ந்துவிட்டது. இன்னொரு அடிமை டெல்லியில் போய் விழுந்துவிட்டது.. என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+