ஆரம்பத்திலேயே வெடித்த மோதல்.. திமுக உட்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! அனல் பறக்கும் டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இன்று ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் கூடியது. இருப்பினும், சில நிமிடங்களிலேயே திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.

நாடாளுமன்றம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மழைக்கால கூட்டத்தொடருக்குக் கூடும். அதன்படி இந்தாண்டும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

All-Party Meeting

அனைத்து கட்சி கூட்டம்

மத்திய அரசு இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பத் தயாராக இருப்பதால், இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

பல்வேறு விவரங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அது குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. அது தொடர்பாக அளித்த விளக்கமும் தெளிவாக இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். நேற்றைய தினம் அவர் வலுக்காட்டாயமாக போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பெரிதாக எடுத்து செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேபோல சமீபத்தில் பல எதிர்க்கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளும் இந்த கூட்டத்தொடரில் கவனம் பெறுகிறது.. மேற்கு வங்க சட்டசபை தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சிப் பிரச்சினையைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் 20 எம்பிக்கள் தேசிய குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மக்களவையில் தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவசேனா

அதேபோல் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியிலும் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் ஆறு மக்களவை உறுப்பினர்கள், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களும் ஏற்கனவே பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான கருத்தை கூறியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதையும் அவையில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸையும் தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்றம்

இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்திருந்தார்.

மத்திய அரசு இதில் பல முக்கியமான மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி 30 நாட்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் தங்களது பதவியை தானாக இழப்பார்கள் என்ற வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+