சென்னையை போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்..பட்ஜெட்டில் ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னையை போல மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இதற்காக 17,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இன்றி பலரும் பயணம் செய்து வருகின்றனர்.சென்னையைப் போல கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2023-24 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் 2025ஆம் ஆண்டில் நிறைவுபெறும். மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை திருமங்கலத்தையும், ஒத்தக்கடையும் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications