சாட்டையை சுழற்றும் முதல்வர்.. வரும் அக்.3, 4ம் தேதிகளில் ஆட்சியர்கள் மாநாடு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் அக்.3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து முதல்வர் உரிய அறிவுரை வழங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கி நிலை சீர்கெட்டு இருப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் இரண்டு நாள் அதிகாரிகள் மாநாடு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications