சென்னை மீஞ்சூரில் மாடியில் படித்து கொண்டிருந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு! 4 பேர் கைது! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே மீஞ்சூரில் வீட்டு மாடியில் உள்ள அறையில் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதை கும்பல் கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிரார். இவர் நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு மாடியில் உள்ள ஒரு அறையில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.

chennai crime

கீழே உள்ள வீட்டில் மாணவியின் பெற்றோரும், அவரது சகோதரரும் இருந்தனர். அப்போது திடீரென மாடியில் இருந்து மாணவியின் அலறல் சப்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து மாடிக்கு ஓடிய போது மாணவி ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அவரது உடலில் பின்னந்தலை, கை என 8 இடங்களில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருப்பதால் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற மர்மநபரை மாணவியின் உறவினர்கள் கடுமையாக தாக்கினர்.

அப்போது அந்த நபர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மாணவியின் வீட்டருகே உள்ள குடியிருக்கும் ரோல்க்ஸ் என்கிற டில்லி பாபு என்றும் 24 வயது என்றும் தெரிந்தது. ஏற்கெனவே அந்த நபர் மீது கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

டில்லிபாபு உள்ளிட்ட 4 பேர் கஞ்சா போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. ஒருவன் மட்டும் வீட்டின் கீழ் தளத்தில் ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்திருந்த நிலையில் மற்ற 3 பேர் மாணவியின் வீட்டின் பக்கப் பகுதியில் இருந்து ஏறி குதித்து மாடிப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மாணவியிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அப்போது அந்த மாணவி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியை வெட்டி கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் மீஞ்சூர் அருகே உள்ள வல்லூரைச் சேர்ந்த சித்திக் (19), லோகேஷ் (22), முத்தமிழ்ச் செல்வன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து டில்லிபாபு உள்பட 4 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி
தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!

படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.

இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று
@mkstalin துடித்துக் கொண்டு இருக்கிறார்.

நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?

தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.

ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்- தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்! என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+