தபால் நிலையங்களில் இருந்து வீடு தேடி வருது.. புதிய வாக்காளர்களே சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழகத்தில் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்ட சுமார் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டையை தபால் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 18 லட்சம் பேர் வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒரே கட்டமாக இல்லாமல் சில மாநிலங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை ஒரே நாளில் தான் நடைபெறும். 2004 முதல் 2006 வரை பிறந்தவர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளாவர்கள். அதாவது 2000க்கு பிறகு பிறந்த வாக்காளார்கள் அதிக அளவில் வாக்களிக்க போகிறார்கள்.

கிட்டத்தட்ட 25 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தமிழகத்திலும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளர்களும் வாக்களிக்க போகிறார்கள். 2004 முதல் 2006 வரை பிறந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு இறுயில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர்களாக இணைப்பதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதுடன் ஜனவரி 22ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் தமிழ்நாடு முழுவதும் வெளியானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய வாக்காளர்களாக ஆயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை தபாலில் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில், வேட்பாளர்கள் இறுதி வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை பெயர் சேர்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இப்போது விண்ணப்பித்தால் கூட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications