ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 20% வணிக சிலிண்டர்களை ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து உள்ளது. இதனால் வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஈரான்- இஸ்ரேல் போரால் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் சீரற்ற முறையில் இருப்பதால், வழக்கமாக வரும் சிலிண்டர்கள் வராமல் ஓட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் சிலிண்டர் உள்ளது எனப் பல ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு நீடித்தால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.
இதற்கிடையே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எரிவாயு ஏற்றி வந்த கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனையடுத்து 4 கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தன. இந்தநிலையில், எரிவாயு நிரப்பட்ட மேலும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு புறப்பட தயாராகி வருகின்றன.
பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய திரவ பெட்ரோலிய எரிவாயும் நிரப்பப்பட்ட 2 இந்திய கப்பல்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜா அருகே நிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கான சிக்னல்கள் வந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவு மையம் தெரிவித்து உள்ளது. அக்கப்பல்கள் இன்று புறப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்திய போரால் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 23 முதல் 50 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு ஹோட்டல்கள், அரசு சமையல் கூடங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் நீரஜ் மிட்டல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குழாய் வழி எரிவாயு திட்டத்தை எளிதாக்க மாநிலங்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் 20 விழுக்காடு கூடுதல் வணிக சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் வணிக சிலிண்டர்களை ரெஸ்டாரன்டுகள், தாபாக்கள் மற்றும் உணவகங்கள், தொழில்துறை சார்ந்த உணவகங்கள், மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் மானிய விலை உணவகங்களுக்கு விநியோகிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோர் அனைவரும் எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்க வேண்டும். வரும் காலத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பிற்கு மாறுவதற்குத் தயாராக உள்ளவர்கள் மற்றும் அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த 50% ஒதுக்கீட்டின் கீழ் எரிவாயு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள்












Click it and Unblock the Notifications