ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கி அடிக்கப் பாய்ந்த சீமான்.. விழுப்புரம் அருகே பரபரப்பு!
சென்னை: விழுப்புரம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவரை சீமான் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனஸ்கோ நிறுவனம். ஆனால் அந்த அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் செஞ்சி கோட்டையை தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை என மராட்டிய மன்னருக்கு சொந்தமான கோட்டை இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியது செஞ்சி கோட்டை, வரலாற்று திரிபை தடுத்து நிறுத்தி, தமிழ் மன்னர் கோட்டையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் இன்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையேற்று பேசினார். இந்த அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து செய்தியாளர்கள் அவருடன் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர். அங்கே இருந்த சிலர் கூச்சல் போட்டு குழப்பம் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
மேடைக்கு கீழே சலசலப்பு ஏற்பட்ட நிலையில் ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கிய சீமான் வேக வேகமாக சலசலப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்றார். அங்கே கூச்சல் போட்டுகொண்டு இருந்த ஒருவரை சீமான் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் தொடர்ந்து அவரை மேலும் தாக்க முயன்ற நிலையில் சீமானை கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications