தமிழக சட்டசபையில் வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல்..சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி ஆணவப்படுகொலை, காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து அதிமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.

கடந்த 20ம் தேதி 2023 -24ம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 21ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்குகிறது.
இன்று காலை சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கற்குறிப்புகள், இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில் உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்துவர்.
வழக்கமாக சட்டசபை தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், இன்று கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு பொதுமக்கள் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இதனிடையே கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை பதில் அளிப்பார் என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமையும், திங்கள் கிழமையும் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. பின்னர் 28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவார்.
பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து 29ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கி, 21ஆம் தேதி வரை மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்க இருக்கிறது. 29ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கையாக காலையில், நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையும், மாலையில் போக்குவரத்து துறையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications