’வடசென்னை சந்திரா’ போல் ஆற்காடு சுரேஷின் மனைவி.. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சபதம்!முடித்தது எப்படி?
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டு இருக்கிறார். தனது கணவரின் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் சேர்க்கப்படாததால் அவரை கொலை செய்ய சபதம் எடுத்ததாக காவல் துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி இந்த கொலை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் ஆந்திராவில் பதுங்கி இருந்த போது அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கை மாறி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் பொற்கொடி தனது கணவரின் தம்பியான பொன்னை பாலுவுக்கு முதல் தவணையாக ஒன்றை லட்சம் ரூபாய் கொடுத்ததோடு நிறைய உதவிகளையும் செய்திருக்கிறார். இந்த கொலை வழக்கில் 'சம்பவம்' செந்தில். சீசிங் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டால் தான் முழு தகவலும் தெரியவரும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினரிடம் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். "ஆற்காடு சுரேஷ் சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்துள்ளார். அவரை பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு உயிர் பயம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து ஆற்காடு வருமாறு நான் தான் கூறினேன். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக சென்னை வந்தபோது பட்டினப்பாக்கம் கடற்கரையில் அவரை கொலை செய்து விட்டார்கள்.
ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவருக்கு தொடர்பு இருப்பதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என நான் சபதம் எடுத்தேன். ஒரு பெண்ணாக என்னால் எதையும் செய்ய முடியாது. எனவே எனது கணவரின் தம்பி பாலுவை அழைத்து பேசினேன். அவர் என்னைவிட கோபத்தில் இருந்தார்.
ஆனால் அவரிடம் பணம் இல்லை.. இதை அடுத்து எனது கழுத்தில் கிடந்த நகை வீட்டிலிருந்து நகை உள்ளிட்டவற்றை விற்று ஒன்றரை லட்சத்தை கொலைக்கான ஆரம்ப வேலைகளுக்கு பயன்படுத்த சொன்னோம்.. ஆற்காடு சுரேஷின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு முன்னால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி அதை செயல்படுத்தினோம்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழியாகவும், ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் மீது கோபத்திலிருந்த அனைவரும் ஒன்றாகச் சேர்ந்த இந்த கொலையை அரங்கேற்றினர்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications