பெண்கள் கல்லூரி.. அதிகரித்த டிமாண்ட்..குழப்பத்தில் அமைச்சர் பொன்முடி!
சென்னை: திமுக உட்பட அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் முக்கியக் கோரிக்கை ஒன்றின் காரணமாக, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 10 மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், எனது தொகுதிக்கு கொடுங்க என 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கோரிக்கைகள் குவிந்திருக்கிறதாம்.

மகளிர் கல்லூரிகள்
தங்கள் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளை அமைத்துக் கொடுக்கக் கோரி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக என அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் துறை அமைச்சரான பொன்முடியிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு வசம் தற்போதைய சூழலில் 10 மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு மட்டுமே திட்டம் தயாராக இருக்கிறது. இதனால் கேட்பவர்கள் அனைவரது தொகுதிகளுக்கும் அரசு மகளிர் கல்லூரிகள் அமைத்துக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள்
இதில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வரை சென்றாவது தங்கள் தொகுதிக்கு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு மகளிர் கலை அற்வியல் கல்லூரிகளை கொண்டு வந்துவிட வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியை சுற்றி வருகிறார்கள். இருக்கும் 10 கல்லூரிகளை யாருக்கு தான் கொடுப்பது எனத் தெரியாமல் அவர் குழப்பத்தில் இருக்கிறாராம்.

பின் தங்கிய மாவட்டங்கள்
இதனிடையே தருமபுரி, அரியலூர், ராமநாதபுரம் போன்ற பின் தங்கிய மாவட்டங்களை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கில் முதற்கட்டமாக இது போன்ற மாவட்டங்களில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளை அமைக்க முதல்வர் முன்னுரிமை கொடுக்கச் சொல்லியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதனடிப்படையில் பணிகளை தொடங்கவுள்ள உயர்க்கல்வித்துறை அதிகாரிகள், கூடுதல் அரசு மகளிர் கல்லூரிகள் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்களாம்.

விவரம் கூறி
தம்மிடம் மகளிர் கல்லூரி தொடர்பாக கோரிக்கை வைக்க வரும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருக்கும் நிலைமையை விவரமாக எடுத்துரைத்து அடுத்த முறை உங்க தொகுதிக்கு ஒதுக்குவதாக பதில் சொல்லி வருகிறாராம் அமைச்சர் பொன்முடி. இருப்பினும் எப்படியாவது என் தொகுதிக்கு கல்லூரியை கொடுங்க என ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரை விட்டபாடில்லையாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications