”வாழ்த்துக்கள் யாத்ரா கண்ணா..” பேரனுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்.. போட்டோ பதிவிட்டு நெகிழ்ச்சி
சென்னை: தனது பேரன் யாத்ரா சான்றிதழ் வாங்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனது லவ்வபுல் பேரன் முதல் மைல்கல்லை தாண்டிவிட்டார்.. யாத்ரா கண்ணாவுக்கு வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த், தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரையும் கட்டி அணைத்த படி யாத்ரா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. 74 வயதிலும் துடிப்புடன் தனக்கே உரிய ஸ்டைலில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் ரஜினிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி
கூலி படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு பிஸிக்கு மத்தியிலும் ரஜினிகாந்த் அவ்வப்போது தனது பேரன்களுடன் நேரத்தை செலவிட தவறுவது இல்லை. அடிக்கடி இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை பார்க்க முடியும்.
இந்த நிலையில்தான், தனது பேரன் பள்ளி படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பெற்றோருடன் யாத்ரா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் பயின்ற யாத்ரா, தனது பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார்.
பேரனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
பள்ளி படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் பெறும் விழாவில் தனுஷ் - ஐஸ்வர்யா பங்கேற்று இருந்தனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றது. எனினும், மகனுக்காக மீண்டும் சந்தித்துக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வரும் நிலையில், ரஜினிகாந்தும் அதே புகைப்படத்தை பதிவிட்டு பேரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், "என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா" என்று பதிவிட்டுள்ளார். பலரும் அவரது பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தனுஷ் இதே புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அதில், 'பெருமைமிகு பெற்றோர்' என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒன்றாக சேர்ந்து புகைப்படம்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்ததில் இருந்தே பெரிதாக ஒரே நிகழ்ச்சியில் அதிகம் தென்படவில்லை. எனினும், இரண்டு மகன்களும் அம்மாவுடனும் அப்பாவுடனும் தனித்தனியே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. தற்போது விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்கள் மகனுக்காக ஒன்றாக பங்கேற்று இருக்கிறார்கள். இந்த பெருமை யாத்ராவுக்குத்தான் சேரும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
"விஜய் ஜெயிச்சிட்டாரு... அடுத்து?" - தனுஷை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! கஸ்தூரி ராஜா பேச்சால் கிளம்பிய சர்ச்சை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications