Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி! தொங்கலில் பஞ்சாப்? சாட்டையைச் சுழற்றும் பாஜக!

Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதனால் 'இந்தியா' கூட்டணியிலிருந்துவந்த பின்னடைவு மெல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் டெல்லி, ஹரியானா, சண்டிகர், குஜராத், கோவா ஆகிய 5 மாநிலங்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.

Congress and AAP Announce Lok Sabha Seat

அதைப்போல் பஞ்சாப் மாநிலத்தில் இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்ட 'இந்தியா’ கூட்டணி பலவீனமடைந்து வருவதாக சில வாரங்களாகவே அரசியல் விற்பன்னர்களால் கருத்து கூறிவந்தனர். இந்திய அளவில் இந்தக் கூட்டணி முயற்சி வெற்றி பெற்றாலும், மாநில அரசியல் என்று வரும்போது இந்தக் கூட்டணிக்குள் சிக்கல் வரும் என்று அவர்கள் கூறி வந்தனர்.

இதனிடையே தான் சில வாரங்கள் முன்னதாக மேற்கு வங்கத்தில் திருணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா அறிவித்தார். அதை நிலைப்பாட்டு ஆம் ஆத்மியும் வந்தது.

Congress and AAP Announce Lok Sabha Seat

இதற்கு நடுவில் இந்தியா கூட்டணியின் முக்கிய முகமாக இருந்த நிதிஷ்குமார், பாஜக பக்கம் தாவினார். இதனால் சல்லி சல்லியாக 'இந்தியா’ கூட்டணி நொறுங்கும் நிலை உருவானது.

ஆக, மோடியை இந்தக் கூட்டணியால் எதிர்க்க முடியாது. ஏனெனில் மோடியை எதிர்ப்பதில் இக்கட்சிகள் அக்கறைகாட்டுவதைவிட, மாநிலத்தில் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கே அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று பலரும் பேசிவந்தனர்.

இந்தநிலையில்தான் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.


ஆம் ஆத்மியை பொறுத்தளவில் அந்தக் கட்சி டெல்லியிலும் பஞ்சாபில் வலுவாக உள்ளது. ஆகவே ஆம் ஆத்மி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு, கிழக்கு ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Congress and AAP Announce Lok Sabha Seat

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்றுவந்தாலும் தற்போது அங்குள்ள 7 மக்களவைத் தொகுதிகளும் பாஜக வசம் உள்ளது. இப்போது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி சேர்ந்து போட்டியிடுவதால், அங்கே பாஜகவை வீழ்த்துவது எளிதாகவே இருக்கும். அந்தளவில் இது ஒரு முக்கியமான மாற்றமாக அரசியல் வட்டத்தில் பேசப்படுகிறது.

இதேபோல் காங்கிரஸ் கட்சி வடமேற்கு, வடகிழக்கு, சாந்தினி சவுக் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. இந்த முறை இணைந்துள்ளன. தேர்தல் களத்தில் இது மாபெரும் மாற்றம்தான்.

ஆகவே, பாஜக வெற்றி மிக எளிதாக அமைந்துவிடாது. இந்தமுறை அந்தளவுக்கு எளிமையாக பாஜக வெற்றி பெற்றுவிட முடியாது.

Congress and AAP Announce Lok Sabha Seat

குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம்26 தொகுதிகள் உள்ளன. இங்கே பாஜகவுக்கு இணையாகக் காங்கிரஸ் இருந்து வருகிறது. ஆம் ஆத்மி வளரும் கட்சியாக இம்மாநிலத்தில் உள்ளது.

ஆகவே குஜராத்தில் உள்ள 24 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அடுத்து கோவா. இங்கே மொத்தம் உள்ள தொகுதிகள் 2. அந்த இரண்டிலும் காங்கிரஸ் மட்டுமே போட்டியிடுகிறது.

அதேபோல் தற்போது மேயர் தொகுதி தொடர்பான சர்ச்சையில் சிக்கி உள்ள சண்டிகர். இது யூனியன் பிரதேசம். இங்கே உள்ள 1 தொகுதியில் காங் மட்டும் போட்டியிடுகிறது.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Congress and AAP Announce Lok Sabha Seat

இது குறித்து பேசிய ஆம் ஆத்மி எம்பி சந்தீப் பாதக், “இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்” என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல டெல்லி காங் தலைவர் அரவிந்தர் சிங் லல்லி, “டெல்லியில் எல்லா தரப்பு சமூகத்தினரும் உள்ளனர். அது ஒரு கலவையான மாநிலம். டெல்லி என்பது உபி கிடையாது. அங்கே ஒரு குறிப்பிட்ட சாதியினர் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த நிலை டெல்லியில் இல்லை. அது ஒரு முக்கியமான விசயம்” என்று கூறியுள்ளார்.

நீங்கள் டெல்லியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்குக் கட்சியை ஒருங்கிணைக்கும் பணி மட்டும் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றதை மேலிடம்தான் முடிவு செய்யும் எனக் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணி உறுதியானதால், டெல்லி தலைநகரைப் பொறுத்தளவில் பாஜகவுக்குப் பெரிய நெருக்கடி உண்டாகி உள்ளது.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஹரீஷ் குரானா, “இறுதியாக காங் மற்றும் ஆம் ஆத்மி இடையே கூட்டணி இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் நாங்கள் எதிர்த்து நிற்போம். டெல்லிக்குள் சேர்ந்து நிற்போம் என்கிறார்கள். இது என்ன கூட்டணி?. இது என்ன அரசியல் நேர்மை? இதை மக்களிடம் நாங்கள் சொல்வோம். ராகுல்காந்தி அவர்களின் முன்னோர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் ” என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+