விஜயால் வந்த வினை.. தமிழக காங்கிரஸ் உள்ளே அடிதடி.. இப்படியே போனால் உடைஞ்சிடும்.. கைமீறிடுச்சே
சென்னை: தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கு இடையில் வெளிப்படையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இவர் மீது காங்கிரஸ் ஆக்சன் எடுக்கவில்லை. காங்கிரசின் இந்த செயல் ஸ்டாலினை கோபப்படுத்தி உள்ளதாம். குறைந்தபட்சம் அவருக்கு கண்டனமாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அதைக்கூட செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறாராம்.
பிரவீன் எல்லை மீறுகிறார்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடுதான் கடன் அதிகமாக வைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் நிலுவை கடன், தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் கடன், உ.பி-யைவிட 2 மடங்கு அதிகம்.
இந்திய மாநிலங்களில் வட்டி சுமை அதிகமாக கொண்ட மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடன், உள்நாட்டு உற்பத்தி, கொரோனா காலத்தை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன்சுமை கவலைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். இவரை ராகுல் காந்தி கட்டுப்படுத்த தவறியது.. தொடர்ந்து இவருக்கு கடிவாளம் போடாமல் இருப்பது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் மீது ஸ்டாலின் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை அட்டாக்
இவரின் பேச்சை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கு இடையில் வெளிப்படையான மோதல் ஏற்பட்டு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தியின் பின்னால் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளது பிரவீன் சக்கரவர்த்தி குறித்து காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளித்து இருக்கிறேன்.
காட்டாட்சி நடத்தும் உத்தரபிரசத்தோடு தமிழ்நாட்டை எப்படி ஒப்பிட முடியும். காங்கிரஸ் பாரம்பரியம் தெரியாத பிரவீன் சுயவிளம்பரத்துக்காக இப்படி பேசுகிறார் என்று செல்வப்பெருந்தகை கோபமாக பேசி உள்ளார்.
திமுகவிற்கு ஆதரவாக வந்த ப. சிதம்பரம், ஜோதிமணி
இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தை ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில் முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற கட்டமைப்பு, நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டில் முன்னிலை வகிக்கிறது. மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உத்திரப்பிரதேசம் பின்தங்கி, நிறுவன நிர்வாகத்திற்குப் பதிலாக "புல்டோசர் ராஜ்" மாதிரியை ஊக்குவிக்கிறது.
கடனை அதன் விளைவுகளுடன் இணைத்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன் பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, வளர்ச்சி மற்றும் மனித வளத்தை வலுப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் நிதி கொள்கைகளும் இங்கு முக்கியம். தமிழ்நாடு அதிக வரிப்பணம் ஈட்டினாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது; உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமான நிதிப் பரிமாற்றங்களைப் பெறுகின்றன. இயற்கை பேரிடர்கள், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி மறுக்கப்படுகிறது. எனவே, கடனை வளர்ச்சி, தனிநபர் குறியீடுகள், வரிப்பங்களிப்பு Vs நிதிப்பகிர்வு, நிர்வாகத் தரம் ஆகிய சூழல்களுடன் விவாதிக்க வேண்டும். இந்த அளவுகோல்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது., என்று பாராட்டி உள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் இதே கருத்தை திமுகவிற்கு ஆதரவாக கூறி உள்ளனர்.
விஜயை பார்த்த பின்பே இப்படி?
இன்னொரு பக்கம் ப. சிதம்பரம் , இலவச இருப்பிடச் சான்றிதழ்* ஜனவரி 25 வரை கட்டணமின்றி இருப்பிடச் சான்றிதழைப் பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு. வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏதுவாக கட்டணமின்றி வழங்க முடிவு. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 'நலம் காக்கும் ஸ்டாலின்' மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன், என்று பாராட்டி உள்ளார்.
சமீபத்தில் விஜயை பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்பே அவர் திமுகவை தாக்கி பேசி வருகிறார். அவரின் இந்த பேச்சுக்கள் காங்கிரஸ் உள்ளே கடும் பிளவை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications