காங்கிரஸ் ஒரு ஓட்டைப் பானை; திருவல்லிக்கேணியில் அண்ணா பேசியது என்ன?
சென்னை: 1962 தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அண்ணாதுரை கலந்துகொண்டு காங்கிரசையும் காமராஜரையும் கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாதுரை தலைமையில் 1962 இல் நடைபெற்ற தேர்தலைச் சந்தித்த திமுக 50 தொகுதிகளில் வென்றது. காமராஜர் தலைமையில் களம் கண்ட காங்கிரஸ் 138 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேரில் 47 பேர் புதியவர்கள்.

அவர்களுக்குச் சட்டசபை அரசியல் அனுபவமே கிடையாது எனக் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தனர். அதற்கு அண்ணாதுரை கூர்மையாகப் பதில் கொடுத்தார். திமுகவுக்கு அனுபவம் இல்லையா? "திமுக உறுப்பினர்களில் 47 பேர் புதியவர்கள் என்கிறார்கள். அதில் பெரிய வித்தியாசம் ஏதும் காணப்படாது. ஏனெனில், அவர்களில் பெரும்பாலானோர் ஆட்சி மன்றத்துக்கோ அல்லது பொதுவாழ்வுக்கோ புதியவர்கள் அல்ல.
நெடுங்காலமாக அரசியல் களத்தில் அனுபவம் பெற்றவர்கள். சிலர் பஞ்சாயத்து அல்லது நகர சபைத் தலைவர்கள். அப்படிப் பார்க்கப்போனால், காங்கிரஸ் உறுப்பினர் 138 பேரில் 66 பேரைத் தவிர மற்றவர்கள் புதியவர்களே. புதிய திமுக உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்றுவர் என்பதில் எனக்குப் பூர்ண நம்பிக்கை உண்டு" என்றார்.
இந்தத் தேர்தலில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருந்தது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் செல்வாக்கில் நின்றது. திமுகவுடன் மொத்தம் 13 கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. அதாவது ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லிம் லீக்., ஜன சங்கம், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர், ஃபார்வேர்ட் பிளாக் எனப் பல கட்சிகள் சேர்ந்து காங்கிரசின் எதிர்த்துப் போட்டியிட்டன. பல கட்சிகளின் பலத்தால் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஆட்சியை இழக்கவில்லை.
ஆனால், தனது செல்வாக்கில் ஒரு பங்கை இழந்தது. மாநிலத்தில் வடமாவட்டம், காவிரி டெல்டா, தாமிரபரணி பகுதி, மேற்கு மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் எனப் பரவலான தொகுதிகளில் இரண்டு இலக்கங்களில் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், திமுக வடமாவட்டங்களில் இரண்டு இலக்கங்களில் வென்றது.காவிரி டெல்டா பகுதி மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் வெற்றியைப் பதிவு செய்த இக்கட்சி தாமிரபரணி டெல்டா பகுதிகளில் ஒரு இடத்தைகூட கைப்பற்றவில்லை.
இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதம் கழித்து பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.என். அண்ணாதுரை, "திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட முடியாது" என்றார். அது பற்றி அன்றைய 'சுதேசமித்திரன்' நாளிதழ் (02.03.1962) அண்ணாதுரையின் பேட்டியை வெளியிட்டது. அதில், "லட்சிய மாற்றத்திற்கு அவசிய, அவசரம் எதுவுமில்லை. பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக, சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் திமுக இயங்கும்" என்றார்.
"தனி அரசாக விளங்கும் 'திராவிட நாட்டை' அடையும் திராவிட முன்னேற்றக் கழக அடிப்படை லட்சியத்தை எவ்வகையிலும் மாற்றியமைக்கும் எண்ணம் கிடையாது. தவறான லட்சியம் அல்லது எட்ட முடியாத லட்சியம் அல்லது இதைவிடச் சிறந்த லட்சியம் கிடைத்துள்ளது என்ற இம்மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டுதான் ஒரு கட்சியின் குறிக்கோளில் மாறுதல் ஏற்பட முடியும். அத்தகைய காரணங்களில் எதுவும் இப்பொழுது தோன்றியுள்ளதாக எனக்குப் புலப்படவில்லை" என்றும் நீட்டி முழங்கி இருந்தார் அண்ணா.
திருவல்லிக்கேணியில் அண்ணாதுரை பேச்சு: "திராவிட நாடு பிரச்சினை ஆராய வேண்டிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அது ஒரு பிரச்சினைதான் என்று வலியுறுத்திக் கூறுவேன். சென்னை சட்டசபையில் திமுக பிரதான எதிர்க்கட்சியாகிவிட்டது முதல் அமைச்சர் காமராஜுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகத் தோன்றவில்லை" என்று விமர்சித்திருந்தார் அண்ணாதுரை.
மார்ச் 5 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாதுரை, "திராவிட நாட்டுக்கோரிக்கையை இன்னும் நான் வற்புறுத்தவே செய்கிறேன். க்கோரிக்கையை விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது சட்டசபையில் 50 இடங்கள் கிடைத்துள்ளது பெரிதல்ல. திராவிட நாட்டுக் கோரிக்கை பெரிதும் முக்கியமானது. கழகம் ஒரு விடுதலை இயக்கத்தைச் செய்யும். திராவிட நாடு அடைவதுதான் திமுகவின் லட்சியம். இதை ஒளிக்க நான் விரும்பவில்லை" என உரையாற்றி இருந்தார்.
தோற்றது ஏன்?
திமுக 1962 தேர்தலில் முந்தைய தேர்தலில் வென்ற சில தொகுதிகளைக் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் இழந்திருந்தது. அதைப் பற்றியும் கூட்டத்தில் எடுத்துக் கூறிய அண்ணாதுரை, "இப்பொழுதுள்ள திமுக உறுப்பினர்களைக் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்டு வென்றதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் 50 தொகுதிகளை இழந்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். காங்கிரஸ் கச்சி பல ஓட்டைகள் உள்ள ஒரு பானைக்குச் சமானம். அடுத்த தேர்தல்களில் கழகத்திற்குப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நான் உள்பட என் கட்சியின் தலைவர்கள் (தூண்கள்) பலர் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், கட்சியினர் வேறு எங்கும் ழுழு கவனம் செலுத்தாமல் காஞ்சிபுரத்திலேயே தங்கள் முழு கவனத்தைச் செலுத்தினார்கள். மற்றபடி இப்பொழுது இருக்கும் 11 உறுப்பினர்களில் தொகுதிகளிலும் கவனம் செலுத்தினார்கள். இந்த 11 உறுப்பினர்களையும் தோற்கடிப்பதிலேயே காங்கிரஸ் தலைவர்கள் 1957 ஆம் வருடத்திலிருந்தே ஊக்கம் காட்டி வந்தார்கள். அது ஒரு திட்டம் போட்டுச் செய்த காரியம். அதனால்தான் நாடாளுமன்றத்திலும் மற்ற இடங்களிலும் எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டார்கள்.
காஞ்சிபுரம் முடிவு பற்றி நான் ஆச்சரியப்படவில்லை. அது எனக்குத் தேர்தல் தினத்தன்று முன்பே கூடத் தெரியும். என்னுடைய தோல்விகளில் கண்ணீர் விட்டுக் கவலைப்படக் கூடாதென்று கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். கட்சியைப் பலப்படுத்துவதில் அவர்கள் இனி ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
- எழுதியவர் கடற்கரய்
-
திமுக காங்கிரஸ் கூட்டணி LIVE: திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது! முழு விவரம்! -
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? திமுகவிடம் வேல்முருகன் வைத்த டிமாண்ட்! -
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு! -
ஆர்பி உதயகுமாருக்கு செக்.. ஓபிஎஸ் நடத்தும் பிரம்மாண்ட இணைப்பு விழா.. திமுகவில் இணையும் 1 லட்சம் பேர் -
திமுக கூட்டணியில் உள்ள 21 கட்சிகள் எவை எவை? இதுவரை 32 சீட் பங்கீடு ஓவர்! முழு லிஸ்ட்! -
காங்கிரஸுக்கு 28+1! மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான்! ஆனாலும் தியாகம் செய்யணுமே! சலித்துக் கொண்ட சோடங்கர்! -
ராஜ்ய சபா தேர்தல்.. திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு! -
ராஜ்யசபா ரேஸில் 'பேராசிரியர்'.. அறிவாலயத்தின் சர்ப்ரைஸ் தேர்வு - யார் இந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்? -
என்கிட்ட கேட்காம.. அறிவாலயம் போகாதீங்க.. கோபப்பட்ட ராகுல்.. கடைசியில் வேண்டா வெறுப்பாக சம்மதம்? -
தேமுதிக பரம்பரையில் ஒரு எம்.பி.. 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பலித்துள்ள நாடாளுமன்ற கனவு! -
அரசியலுக்கு வர்றாங்க மு.க.அழகிரி மகள்? கனிமொழிக்கு பின் கயல்விழி Entry.. மாமதுரையே பத்திக்கிச்சு! -
விருட்டென முன்னேறும் திமுக.. ஃபைனல் ஆன தொகுதி பங்கீடு பட்டியல்! யாருக்கு எவ்வளவு சீட்? கசிந்த தகவல்! -
திருச்சி சிவா, சல்மா, திலக்.. ராஜ்ய சபாவில் ஆதிக்கம் செலுத்தும் திருச்சி.. அள்ளிக் கொடுக்கும் திமுக! -
டெல்லிக்கு போகும் விஜயகாந்த் மச்சான்.. தேமுதிகவின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே. சுதீஷ்?














Click it and Unblock the Notifications