பெரிய ரிஸ்க் எடுத்த காங்கிரஸ்.. மயிலாடுதுறையில் இந்த முறை சுதா போட்டி.. மணிசங்கர் ஐயர் தொகுதியாச்சே
சென்னை: மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி இந்த முறை வழக்கறிஞர் சுதா என்பவரைக் களமிறக்கி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மூன்று முறை வென்ற இந்தத் தொகுதியில் சுதா இந்த முறை வெற்றிக்கொடி நாடுவார் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அதில் 8 தொகுதிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட தாமதத்திற்குப் பிறகு பாக்கி இருந்த மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டார்.

மணிசங்கர் ஐயர்: இதே மயிலாடுதுறையில் தொகுதியில் மணிசங்கர் ஐயர் பல முறை போட்டியிட்டுள்ளார். அங்கே அவர் சில முறை வென்றுள்ளார். சில முறையும் தோல்வியையும் தழுவி இருக்கிறார். மணிசங்கர் ஐயர் முதலில் கடந்த 1991இல் தான் இங்கே களமிறங்கினார். அப்போது அவர் பி.கல்யாணம் குத்தாலம் என்பவரை சுமார் 1.61 லட்சம் வாக்குகள் வித்தியத்தில் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து 1996இல் தேர்தல் போது தமிழ்நாட்டில் காங்கிரஸில் இருந்து மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். ஆனால், மணிசங்கர் ஐயர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார். 1996இல் மயிலாடுதுறையில் மணிசங்கர் ஐயர் போட்டியிட்ட போதிலும் அவரால் அங்கே வெல்ல முடியவில்லை. சுமார் 1.53 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
வெற்றி: 1998 தேர்தலில் காங்கிரஸ் அவருக்கு வாய்ப்பு தராத நிலையில், அவர் சுயேச்சையாகக் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கிருஷ்ணமூர்த்தி வென்றார். சுயேச்சையாகக் களமிறங்கிய போதிலும் அவர் சுமார் 73 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். இது அங்கே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகும். அப்போது மத்தியில் இருந்து அரசு கவிழ்ந்த நிலையில், 1999இல் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அப்போது மணிசங்கர் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. அதில் அவர் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
தொடர்ந்து 2004இல் அங்கே நடந்து தேர்தலில் அவர் அதிமுகவின் ஒஎஸ் மணியனை எதிர்த்துக் களமிறங்கினார். இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று இருந்த நிலையில், மணிசங்கர் ஐயர் மிகப் பெரிய வாக்கு வித்தியத்தில் வென்றார். சுமார் 1.95 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அவர் வென்றார். இந்த காலகட்டத்தில் தான் அவருக்கு பொட்ரோலிய துறை அமைச்சராக இருந்தார். 2006 வரை பொட்ரோலிய துறை அமைச்சராக இருந்த அவர், அதன் பிறகு விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
தேமுதிகவால் கிடைத்த தோல்வி: இதன் காரணமாக 2009இல் நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. இருப்பினும், அவர் அதிமுகவின் ஒஎஸ் மணியனிடம் இந்த முறை தோல்வி அடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 36 ஆயிரம் தான். இந்தத் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. தேமுதிக பெற்ற 44 ஆயிரம் வாக்குகள் தான் இந்த தொகுதியில் தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளது. அதன் பிறகு பெரியளவில் சோபிக்க முடியவில்லை.
2014 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மிக பெரியளவில் எதிர்ப்பு நிலவிய நிலையில், இதில் இவரும் படுதோல்வி அடைந்தார். இந்த முறை வெறும் 58 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று மணிசங்கர் ஐயர் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். கடந்த 2019இல் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் ராமலிங்கம் வென்று எம்பி ஆன நிலையில், இந்த 2024 தேர்தலில் மீண்டும் இந்த தொகுதி காங்கிரஸ் கூட்டணிக்கே ஒதுக்கப்பட்டது.
தாமதம்: இந்த முறை காங்கிரசுக்கு இந்த கூட்டணி ஒதுக்கப்பட்ட நிலையில், பிரவீன் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவர் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருப்பவர். இருப்பினும், இதற்கு மயிலாடுதுறை காங்கிரஸ் மட்டுமின்றி திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தொடர்பு இல்லாதவர் என்றும் உள்ளூரில் தொடர்பு இல்லாத நபர் என்பதால் இவர் களமிறங்கினால் அது காங்கிரஸுக்கு பின்னடைவைத் தரும் அவர்கள் சொன்னதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த போதிலும் மயிலாடுதுறைக்குத் தொகுதியில் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் இன்று வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றே சொல்லப்பட்டது.
காங்கிரஸ் எடுக்கும் ரிஸ்க்: அதன்படி சுதா என்பவருக்குக் காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஜோதிமணிக்கு பிறகு காங்கிரஸில் உள்ள 2ஆவது பெண் வேட்பாளர் இவர் ஆவர். இவர் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருப்பவர். தொடர்ச்சியா விவாதங்களில் பங்கேற்று உள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியைப் பொறுத்தவரை அங்கே அதிமுக சார்பில் பாபு, பாஜக- பாமக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த ம.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்படி அங்கே பல முனை போட்டி நிலவும் நிலையில், சுதாவுக்கு வாய்ப்பு கொடுத்து காங்கிரஸ் மிகப் பெரிய ரிஸ்கை எடுத்துள்ளது. இதன் பலன் கிடைக்குமா இல்லையா என்பது கொஞ்சக் காலத்தில் தெரிந்துவிடும்.
-
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்











Click it and Unblock the Notifications