முதலில் ஒப்புதல் அளித்துவிட்டு அவையில் வந்து நாடகம் ஆடுகிறார் ஆளுநர் ரவி.. காங்கிரஸ் அட்டாக்!
சென்னை: ஆளுநர் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ரவி பேரவையிலிருந்து வெளியேறினார். இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஆளுநரின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநர் அவைக்கு வந்த உடன் தமிழிலேயே பேச முயற்சி செய்தார். அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை. பிரதமர் மோடி எப்படி திருக்குறளை படிக்கிறாரோ அதேபோல தவறான உச்சரிப்புடன் தமிழில் பேசினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கவில்லை என்பதை மிகப் பெரிய குறையாக சொன்னார்.
தமிழக சட்டப்பேரவையில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுதான் இன்றும் பின்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரபு எப்போதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம். இதைக் கூட புரிந்து கொள்ளாதவராக ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.
ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறது. மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார். 2 நிமிடங்கள் காத்திருந்து தேசிய கீதம் பாடிய பிறகு ஆளுநர் சென்றிருக்கலாம். மத்திய அரசுக்கு எதிரான மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் குறிவைத்து அவமரியாதை செய்கின்றனர்.
தமிழ்நாடு அரசு தயாரித்த உரைக்கு ஆளுநர் தான் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதல் பெறப்போகும்போதே இது எனக்கு பிடிக்கவில்லை, இதை நான் படிக்க மாட்டேன் என்று கூறி இருக்கலாம். ஆனால் உரைக்கு முதலில் ஒப்புதல் தந்த பிறகு சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் நாடகம் ஆடியுள்ளார். ஆளுநர் ரவியின் இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம். சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஷமத்தனம் செய்து சட்டமன்ற மாண்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சிதைத்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார் செல்வப்பெருந்தகை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications