நாங்க நீட் தேர்வை எதிர்க்க இது தான் காரணம்... இந்த புள்ளிவிவரத்தை நீங்களும் பாருங்க -ஜோதிமணி எம்.பி
சென்னை: நீட் தேர்வால் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவராக வேண்டும் என கனவு காணும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.கே.ராஜன் வெளியிட்டுள்ள புள்ளியியல் விவரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு;
2010-2011-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 80.2 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 19.79 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2011- 2012-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 81.95 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 18.05 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடந்தது.
2012 -2013 காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 81.42 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 18.58 சதவீதமும் மாணவர் சேர்க்கை இருந்தது.
2013-2014-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 82.55 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 17.45 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2014-2015 -ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 80.87 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 19.12 சதவீதமும் மாணவர் சேர்க்கை இருந்திருக்கிறது.
2015 -2016-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 83.05 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 16.94 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது.
2016-2017 -ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 85.12 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 14.88 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2017 -2018-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 98.41 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 1.06 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2018-2019-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 96.73 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 3.27 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2019-2020-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 98.31 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 1.69 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2020-2021-ம் ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றோர் 98.01 சதவீதமும் தமிழ் வழிக் கல்வி கற்றோர் 1.99 சதவீதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டு பார்க்க வேண்டும் என்பது என்னவென்றால், கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ் வழிக்கல்வி கற்ற கிராமப்புற மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்பதை தான். 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 20% தமிழ் வழிக்கல்வி கற்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து வந்தனர்.
நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்தது முதல் இந்த எண்ணிக்கை மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த நான்காண்டுகளையும் மொத்தமாக சேர்த்தால் கூட தமிழகத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழ் வழிக்கற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications