திருச்சியில் மிஸ் ஆனதை மயிலாடுதுறையில் தூக்க நினைத்த திருநாவுக்கரசு? ட்விஸ்ட்! என்ன நடந்தது?
சென்னை: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், மயிலாடுதுறை தொகுதியை பெற காங்கிரஸ் சிட்டிங் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசு தீவிர முயற்சி மேற்கொண்டதாக தகவல்ச் வெளியானது. எனினும், திருநாவுக்கரசுவுக்கு இந்த தொகுதியை காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கவில்லை.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலிலே தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாளாகும். இதனால், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டார்கள்.

ஆனால், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் நீண்ட இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக இன்றுதான் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் திருவள்ளூர் (தனி), கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடந்த 23-ந்தேதி வெளியானது.
நெல்லை, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரிந்துக்கட்டி நின்றதால் இந்த 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு சிரமம் ஏற்பட்டது. நெல்லை, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலினின் பிரசாரம் நேற்று இருந்ததால் நெல்லை காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தாரகை ஆகியோர் அன்றைய தினம் அறிவிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை தொகுதிக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி, கேவி தங்கபாலு, திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. மணி சங்கர் அய்யர், கட்சியின் முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், பிரவின் சக்கரவர்த்தி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி சுதா உள்பட நிர்வாகிகள் முட்டி மோதினார்கள். இதில் சுதாவை வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
முதலில் பிரவீன் சக்ரவர்த்தியை நியமிக்க காங்கிரஸ் நினைத்தது. இவர் ராகுலுக்கு நெருக்கம். ஆனால் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரவீன் சக்ரவர்த்தியை காங்கிரஸ் கைவிட்டது. இதோடு இல்லாமல் அந்த நபர் உள்ளூர் கிடையாது . அவர் வெளியூர் என்பதால் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகளும் அவரை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. நாசே ராமச்சந்திரன் என்பவரும் முன்னிலையில் இருந்தாலும் அவருக்கு உள்ளூர் அனுதாபிகள் அதிகம் இல்லை.
அதேபோல் திருச்சி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசுக்கு இந்த முறை அந்த தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் அங்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது உறுதியானது. இதனால், திருச்சிக்கு பதிலாக ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று திருநாவுக்கரசு முனைப்பு காட்டியதாக தெரிகிறது.
இதற்காக டெல்லியில் தனக்கு உள்ள சோர்ஸ் மூலமாக மயிலாடுதுறையை பெற பகீரதப்பிரயத்தனம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. திருநாவுக்கரசு மட்டும் இன்றி மயிலாடுதுறைக்கு குறிவைத்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே மேலிடத்திற்கு நன்கு பரிட்சயமானவர்கள் மட்டும் இன்றி டெல்லி தலைமைக்கு நெருக்கமானவர்களை நன்கு அறிந்தவர்கள்.
இதனால், மயிலாடுதுறையை பெற காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பெரும் யுத்தமே நடைபெற்றது என்று சொல்லும் அளவுக்கு கடுமையான முயற்சி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவை இறக்கினால், தர்மசங்கடம் ஏற்படும் எனக் கருதிய டெல்லி தலைமை சுதாவுக்கு வாய்ப்பு அளித்தாக சொல்லப்படுகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications