காங்கிரஸுக்கு 28+1! மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான்! ஆனாலும் தியாகம் செய்யணுமே! சலித்துக் கொண்ட சோடங்கர்!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான். ஆனால் கூட்டணிக்காக தியாகம் செய்தாக வேண்டும் என அந்த கட்சியின் மேலிட பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா இல்லை முறியுமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. காரணம், திமுகவிடம் இருந்து 39 தொகுதிகளையும் 2 ராஜ்யசபா சீட்டுகளையும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் திமுகவோ 25 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்டை மட்டுமே கொடுக்க ஒப்புக் கொண்டது.

ஆனாலும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் தொடர்ந்து திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால் அக்கட்சி மார்ச் 3 ஆம் தேதி அன்று கூட்டணியை இறுதி செய்ய கெடு விதித்தது போன்ற நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் "25 தொகுதிகளுக்கு பதிலாக 28 தொகுதிகளை தருகிறோம். ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம். அதற்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம் என ஸ்டாலின், ப.சிதம்பரத்திடம் கட் அன்ட் ரைட்டாக" தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதை அப்படியே காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு ப.சிதம்பரம் கடத்தினார். இதையடுத்து காங்கிரஸ் தலைமையும் யோசித்து பார்த்து ஸ்டாலின் சொன்ன டீலுக்கு ஓகே சொல்லிவிட்டது. இதையடுத்து நேற்று இரவு திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.
இதற்காக படிவங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எங்களுக்கு முழு மகிழ்ச்சி என்றார்.
ஆனால் கிரிஷ் சோடங்கர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 28 இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் பெரிய மகிழ்ச்சி இல்லைதான். இருப்பினும் கூட்டணிக்காக தியாகம் செய்துள்ளோம். எங்களுக்கு பலமே எங்களது தலைமைதான்.
தமிழகத்தில் ராகுல் காந்திக்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. எங்களது கட்சிக்கு தமிழகத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஏராளமான நலன் விரும்பிகளும் ஆதரவாளர்களும் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் அர்ப்பணிப்புள்ள வாக்காளர்களையும் தொண்டர்களையும் நலம்விரும்பிகளையும் நீங்கள் காணலாம்.
இது இந்தக் கூட்டணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது. எங்களது வாக்கு சதவீதம் 14% க்கும் அதிகமாக உள்ளது; சில நேரங்களில் அது 20% வரை கூட அதிகரிக்கலாம். இது தவிர, அனைத்து நிலைகளிலும் நாங்கள் கிராம கமிட்டிகளையும் அமைத்துள்ளோம். எங்களுடைய பூத் கமிட்டிகளும், பி.எல்.ஏ-க்களும் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுவும் கூட்டணிக்கு வலு சேர்க்கும்.
எங்களிடம் ஒரு பெரிய விருப்பப் பட்டியல் இருந்தது. ஆனால் ஒரு கூட்டணியில் இருக்கும் போது நீங்கள் நினைத்த அனைத்தும் உங்களுக்குக் கிடைக்காது. திமுக உள்பட இந்தக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் முழுமையாக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
யாரும் திருப்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு கூட்டணி அமையும் போது அங்கு சில தியாகங்களை செய்ய வேண்டும். திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எங்களது தொண்டர்கள்தான் மையப்புள்ளியாக இருந்தனர். தலைவர்கள் அல்ல, எங்களின் ஒட்டுமொத்த கவனமும் எங்கள் தொண்டர்கள் மீதுதான் இருந்தது; இந்த கூட்டணியால் எங்கள் தொண்டர்கள் எப்படிப் பயன்பெற முடியும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
28 இடங்கள் குறைவாகத் தெரிந்தாலும், இதை ஏற்றுக்கொண்டதற்கான காரணம்-அரசும் திமுக தலைமையுமே உள்ளாட்சி அமைப்பு மட்டத்திலும், வாரியங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் எங்களது கோரிக்கையை தீவிரமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications