ஆசையாக இருந்த தவெக விஜய் தரப்பிற்கு.. ராகுல் காந்தி தந்த அதிர்ச்சி வைத்தியம்.. இப்படி பண்ணிட்டாரே!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்த செயல் ஒன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தவெக விஜய் தரப்பிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. திரையுலகமே பெரிதாக விஜயை ஆதரிக்காத நிலையில்.. காங்கிரஸ் இதில் விஜய்க்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

விஜய் காங்கிரஸ்
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
காங்கிரஸ் விஜய் ஆதரவு
மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளது.
முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக கருத்து சொல்லி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி செய்துள்ள போஸ்டில், ஜனநாயகன் திரைப்படத்தை தடுப்பதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றிப்பெற மாட்டீர்கள், என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்
ஆசையாக இருந்த தவெக
இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி வைக்கும்.. ராகுல் - விஜய் கரம் கோர்ப்பார்கள் என்றெல்லாம் தவெக தரப்பினர் கனவு கண்டனர். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்த செயல் ஒன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள புனித தாமஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று வருகிறார். மைசூருவிலிருந்து அவர் மாலை 3 மணிக்கு மேல் கூடலூர் வந்தார். சுமார் 4.30 மணியளவில் அங்கே நிகழ்வில் கலந்து கொண்டார். பொங்கல் விழா கொண்டாட்டத்திலும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ராகுல் காந்தி ஆ ராசாவுடன் நீண்ட நேரம் சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தார். நீண்ட நேரம் இவர்கள் நட்பாக பேசிக்கொண்டு இருந்தனர். அரசியல் எல்லாம் கடந்து பேசுவது போல இவர்கள் நட்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.
திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஒருவருடன் ராகுல் காந்தி நெருக்கமாக பேசியது ஆசையாக இருந்த தவெக தரப்பை.. அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கூட்டணிக்கு வருவார் என்று நினைத்த விஜயின் தரப்பிற்கு ராகுலின் செயல் கண்டிப்பாக ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
-
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications