“அமித்ஷா 1000 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது”.. விளாசும் காங்கிரஸ்!
சென்னை: "ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது." என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தென்மண்டல பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்நிலையில். அமித் ஷாவுக்கு பதில் கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லையில் நேற்று பாரதிய ஜனதா கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசை அகற்றுவோம் என்றும் அ.தி.மு.க. - பாஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதிகார மமதையோடு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற இருவரில் ஒருவராக இருப்பவர் அமித்ஷா. ஒவ்வொரு முறையும் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தால் பா.ஜ.க., கூட்டம் நடத்தலாம், பேரணி நடத்தலாம். ஆனால், தமிழநாட்டு மக்களின் ஆதரவை பெறுவதற்கு பதிலாக வெறுப்பையே பெற முடியும். அமித்ஷாவின் கடந்த கால வரலாறு அறிந்தவர்கள் இவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டுமென்று கூறுகிற அமித்ஷா, அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகளின் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க - பா.ஜ.க தமிழ்நாட்டு மக்களால் நிச்சயம் நிராகரிக்கப்படும். அ.தி.மு.க கட்சியினர், பா.ஜ.கவுடன் கூட்டணி சேராமல் இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று முனகிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அ.தி.மு.க தலைமையோ உள்துறை அமைச்சரின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பொருந்தாக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்படுவது உறுதி.
தி.மு.க ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளதாக கூறுகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக எந்த குற்றச்சாட்டையும் எவராவது முன்வைத்து எந்த வழக்கும், எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் இன்றைக்கு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிலும் பெரும்பாலான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களால் குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தவிர, தி.மு.க ஆட்சியில் இதுவரை எந்த ஊழலும் ஆதாரப்பூர்வமாக எவரும் கூறியதில்லை.
ஆனால், 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரபேல் விமான ஊழல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் முறைகேடுகள், தேர்தல் நன்கொடை பத்திர மோசடி, நெடுஞ்சாலைத்துறையில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தாக சி.ஏ.ஜி அறிக்கை கூறிய பிறகும் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, அதானி - அம்பானி போன்ற சில தொழிலதிபர்களுக்கு அரசு மூலம் சலுகைகள் வழங்கி வருமானத்தை பெருக்கி சொத்து குவித்ததை விட மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும்?
பா.ஜ.க ஆட்சி வருவதற்கு முன்பு உலக பணக்காரர்கள் வரிசையில் 209-வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு மூன்றாவது இடத்தில் உலக பணக்காரராக மாறியதற்கு பிரதமர் மோடி தானே பொறுப்பு? அதானியின் சொத்து குவிப்பிற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு மோடி தயாரா?
இன்றைய மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39 சதவிகிதம் பேர் இருப்பதை அமித்ஷாவால் மறுக்க முடியுமா ? அவர்கள் மீது சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 130-வது அரசமைப்புச் சட்ட திருத்தம் அமல் செய்யப்படுமா ? இன்றைய மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர் மீது வழக்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்குகளை திருடி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் அவதூறு கட்டுக்கதைகளை தமிழ்நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக நீட் திணிப்பு, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு, தமிழ் மொழிக்காக பரிந்து பேசும் அமித்ஷா, அதற்காக ரூபாய் 20 கோடி நிதியை மட்டுமே ஒதுக்கி விட்டு, 24,000 பேர் பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 609 கோடி ஒதுக்கியவர் தமிழ் மொழிக்காக, திருக்குறளுக்காக அமித்ஷாவின் பேச்சு நீலிக் கண்ணீராக இருக்குமே தவிர, அதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு?












Click it and Unblock the Notifications