ஸ்டாலினை பார்த்து "குரைத்தால்".. ஈவிகேஎஸ் இளங்கோவன் நறுக்.. டென்ஷனில் கொதிக்கும் பாஜக

அண்ணாமலையை ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: . முதல்வர் ஸ்டாலினை பார்த்து குரைப்பவர்களும் சூரியனை பார்த்து குரைப்பவர்களும் ஒன்று தான் என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையை விவரிக்கும் வகையில், மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் துவங்கப்பட்டது.

சென்னை, ஆதம்பாக்கம், ஏரிக்கரை தெருவில் தொடங்கிய இந்த பிரச்சார பயணமானது, ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நிறைவடைந்தது.

ஆதம்பாக்கம்

ஆதம்பாக்கம்

இந்த மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை ஆதம்பாக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்... பிரச்சார பயணத்தில், வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களுக்கு, பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன...

இளங்கோவன்

இளங்கோவன்

இந்த நிகழ்ச்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: "3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றாலும்கூட, அதை மறுபடியும் கொண்டு வருவோம் என்று பாஜக மாநில தலைவர் பேசியிருக்கிறார்.. அவர் யாரென்றே எனக்கு தெரியாது... அண்ணாமலையோ, சின்னமலையோ, திருவாண்ணாமலையோ... யாராக இருந்தால் என்ன? இப்படியா பேசுவது என்று சிந்தித்து பாருங்கள்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குரல் ஒழிக்கப்படவேண்டிய குரலாகும்.

 படகு - போஸ்

படகு - போஸ்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் என்று சொல்லிக்கொண்டு, தண்ணீர் கால் அளவு இருக்கும் இடத்திற்கு சென்று படகில் உட்கார்ந்து, அண்ணாமலை போட்டோவிற்கு போஸ் தருகிறார்.. இது என்னவென்று சொல்வது? இதே மாதிரி இன்னொருத்தர் இங்கே இருக்காரு.. அவர் பேர் எச்.ராஜா..!

ஸ்டாலின்

ஸ்டாலின்

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு என்பதெல்லாம் இப்போது கேள்வி குறியாகிவிட்டது.. ஆனால், இந்தியாவில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.. முதல்வர் ஸ்டாலினை பார்த்து குரைப்பவர்களும் சூரியனை பார்த்து குரைப்பவர்களும் ஒன்றுதான்... நகராட்சி தேர்தலிலும் நம்முடைய கூட்டணியே அபார வெற்றி பெறும்" என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. தமிழக பாஜக தலைவர்கள் தலைவர்கள் குறித்து முன்வைக்கப்பட்ட இந்த கருத்துக்கள் அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+